நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.      

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 10, 2021, 06:26 PM IST
  • டான் திரைப்பட ஃபர்ஸ்லுக் வெளியீடு
  • சிவகார்த்திகேயனின் கலக்கல் நடிப்பில் டான்
  • அனிருத் இசையில் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார்
நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. LYCA PRODUCTIONS சுபாஸ்கரன் மற்றும்  SIVAKARTHIKEYAN PRODUCTIONS இணைந்து வழங்கும் இந்த படதின் ஃபர்ஸ்ட் லுக்கே கலக்கலாக இருக்கிறது. Lyca Productions சுபாஸ்கரன், SK Productions உடன் இணைந்து தயாரிக்கும், “டான்” திரைப்படத்தை இயக்குகிறார் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும், திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே, ரசிகர்களிடம்  எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி என பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்.

அனிருத்தின் இசையில் வெளியான வண்ணமயமான மோஷன் போஸ்டர், ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. .இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படக்குழுவினர்  தற்போது கலர்ஃபுல் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

டான் திரைப்பட டைட்டில் அறிவிப்புடன் வெளியான  மோஷன் போஸ்டரைப் பார்த்தாலே,  இது ஒரு காமெடி கலக்கல் பொழுதுபோக்கு படம் என்று தோன்றியது சரிதான் என்பதை  ஃபர்ஸ்ட் லுக் உறுதிப்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் மிகச் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன், பார்வையாளர்களுக்கு திருவிழா கொண்டாட்ட அனுபவத்தை வழங்கும் என தயாரிப்பாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

Also Read | நேரடியாக OTT தளத்தில் வெளியாகும் பொன் மாணிக்கவேல்

‘டாக்டர்’ படத்தின் பிளாக்பஸ்டர் ஹிட் ஜோடி, சிவகார்த்திகேயனும், பிரியங்கா மோகன் இணையும் இந்தப் படத்தில் நடிகர் S.J.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், R.J.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி, ஜார்ஜ், ஆதிரா மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப குழு: அனிருத் (இசை), கே.எம்.பாஸ்கரன் (ஒளிப்பதிவு), நாகூரன் ராமச்சந்திரன் (எடிட்டர்), உதயகுமார் K (கலை), விக்கி (ஸ்டண்ட்ஸ்), சுரேன் G-S அழகியகூத்தன் (ஒலி வடிவமைப்பு-ஒலி கலவை), விக்னேஷ் சிவன்-ரோகேஷ் (பாடல்கள்), பிருந்தா -ஷோபி பால் ராஜ்-பாப்பி-சாண்டி (நடன அமைப்பு), அனு-ஹரிகேஷ்-நித்யா-ஜெஃபர்சன் (ஆடை வடிவமைப்பு), பெருமாள் செல்வம் (காஸ்ட்யூமர்), P கணபதி (மேக்கப்) ஸ்டில்ஸ் பிருதிவிராஜன் N (ஸ்டில்ஸ்), M.மஞ்சுநாதன் (தயாரிப்பு மேலாளர்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு), டுனெ ஜான் (போஸ்டர் டிசைனர்), வீர சங்கர் (தயாரிப்பு நிர்வாகி), திவாகர் J - AR கார்த்திக்-ராகுல் பரசுராம் (SK Productions), GKM  தமிழ்குமரன் (Head, Lyca Productions), கலை அரசு (இணை தயாரிப்பாளர்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

Also Read | சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் முக்கிய அப்டேட் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News