ரஜினி பற்றி அவதூறு? வருத்தம் தெரிவித்த யூடியூப் சேனல்

தமிழ் யூடுயூப் சேனல்களில் 18 + என்று குறிக்கொண்டு ஆபாசமாக பேசி வீடியோகளை பதிவிட்டு அதன் மூலம் பிரபலமடைந்தவர்கள் பிலிப் பிலிப் யூடுயூப் சேனல். 

Written by - ZEE Bureau | Last Updated : Nov 15, 2021, 11:13 AM IST
ரஜினி பற்றி அவதூறு? வருத்தம் தெரிவித்த யூடியூப் சேனல்

 இன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மறுபுறம் தமிழ் சினிமாக்களை விமர்சிக்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. முன்பெல்லாம் படத்தின் விமர்சனம் வார இறுதியில் தான் தொலைக்காட்சியில் வரும் ஆனால், தற்போது படம் வெளியான ஒரு சில மணி நேரத்திலேயே அந்த படத்தின் விமர்சனம் வெளியாகிவிடுகிறது.

அதன்படி தற்போது தமிழ் யூடுயூப் சேனல்களில் 18 + என்று குறிக்கொண்டு ஆபாசமாக பேசி வீடியோகளை பதிவிட்டு அதன் மூலம் பிரபலமடைந்தவர்கள் பிலிப் பிலிப் யூடுயூப் சேனல். இந்த “Plip Plip” என்ற யூடுப் சேனலை நடத்தி வருபவர் சர்வ்ஸ் மற்றும் குருபாய் ஆகியோர் ஆவார்கள். இவர்கள் அண்மையில் வெளியான நடிகர் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) அண்ணாத்த (Annaattheபடத்தின் ரோஸ்ட் வீடியோவை வெளியிட்டு இருந்தார். 

ALSO READ | காட்சிகள் அமைப்பில் கோட்டைவிட்ட சிவா; அண்ணாத்த விமர்சனம்

இந்த வீடியோ வெளியாகி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்து இருக்கிறது. அத்துடன் இந்த வீடியோ குறித்து பல யூடியூப் பிரபலங்கள் கடுமையாக கண்டித்து பலர் வருகின்றனர். மேலும் இது மிகப் பெரிய தப்பு என்று கொந்தளித்து பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது அண்ணாத்த படத்தின் ரோஸ்ட் வீடியோ குறித்து விளக்கம் அளித்து பிலிப் பிலிப் யூடுயூப் சேனல் சர்வ்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர்., பிலிப் பிலிப் நாங்கள் படங்களை ரோஸ்ட் செய்து வீடியோ வெளியிடுகிறோம். இந்த ரோஸ்ட் வீடியோக்களை நாங்கள் 3 முதல் 4 வருடங்களாக வருகிறோம். ஒரு படத்தை ரோஸ்ட் செய்கிறோம் ஆனால் அந்த படத்தில் நடித்த நடிகர்களையோ, நடிகைகளையோ அல்லது இயக்குநரையோ ரோஸ்ட் செய்கிறோம் என்று அர்த்தம் இல்லை. அந்த படத்தில் இருக்கும் கேரக்டர், வசனம், படத்தின் திரைக்கதையில் பிற்போக்கு இருக்குமே ஆனால் கேலி செய்கிறோம். 

அண்ணாத்த ரோஸ்ட் வீடியோ பற்றி பேசுகையில், சிலர் இந்த படத்தின் ரோஸ்ட் வீடியோவை பார்த்து வருத்தப்படுகிறார். அவர்கள் வருத்தப்படுவது எனக்கும் வருத்தமாக தான் இருக்கிறது. என்னுடைய நோக்கம் அவர்களை வருத்தப்படுத்துவது அல்ல. நன் சாதி வாதமோ அல்லது மத வாதமோ நான் பேசவில்லை. கெட்ட வார்த்தை வார்த்தையில் இல்லை அதன் நோக்கத்தில் தான் உள்ளது. சமுத்துவதிற்க்கும், சமூக நீதிக்கும் எதிராக பேசப்படும் அனைத்து வார்த்தைகளும் கெட்ட வார்த்தை தான். நாங்கள் ஒரு நாளும் சமூக நீதி மற்றும் சமுத்துவதிற்க்கு எதிராக பேசி இருக்க மாட்டோம். இனிமேலும் பேச மாட்டோம். நன்றி என்று குறிப்பிட்டு இருந்தார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் வெளியான முதல் நாளே கோடிக்கணக்கில் வசூலை குவித்தது. இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது எனது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | அண்ணாத்த திரைப்பட விமர்சனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News