சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படம் release date வெளியிடப்பட்டது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி!! ரஜினியின் அடுத்த படமான அண்ணாத்த படத்தின் ரிலீஸ்  தேதி வெளியிடப்பட்டது. இந்த படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 4, 2021 அன்று திரைக்கு வரும்.

Written by - ZEE Bureau | Last Updated : Jan 25, 2021, 09:54 PM IST
  • சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.
  • அண்ணாத்த படம் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டது.
  • நவம்பரின் வெளிவருகிறது அண்ணாத்த திரைப்படம்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படம் release date வெளியிடப்பட்டது

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி!! ரஜினியின் அடுத்த படமான அண்ணாத்த படத்தின் ரிலீஸ்  தேதி வெளியிடப்பட்டது. இந்த படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 4, 2021 அன்று திரைக்கு வரும்.

அண்ணாத்த (Annaatthe) தயாரிப்பாளர்கள் ட்விட்டரில் இந்த செய்தியை வெளியிட்டனர். “#அண்ணாத்த நவம்பர் 4, 2021 அன்று வெளியிடப்படும்! #அண்ணாத்ததீபாவளிக்கு தயாராகுங்கள்! ” என்று ட்விட்டரில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. படம் எப்போது வெளியாகும் என்ற குழப்பத்திலிருந்த ரஜினி (Rajinikanth) ரசிகர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய செய்தியாக வந்துள்ளது.

சிருத்தை சிவா இயக்கி, சன் பிக்சர்ஸ் (Sun Picturese) தயாரித்த அண்ணாத்த படத்தில், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ் மற்றும் சூரி ஆகியோர் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

ALSO READ: Rajinikanth-இன் அண்ணாத்தே படபிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா?

முன்னதாக, நீண்ட இடைவெளிக்குப் பிறகு அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் துவங்கியது. எனினும், படப்பிடிப்பு குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சூப்பர் ஸ்டார் (Super Star) ரஜினிக்கும் இதன் பிறகு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர்களான சன் பிக்சர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி ட்வீட் செய்துள்ளனர். இதனையடுத்து, ரஜினி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

ALSO READ: ரஜினி நடிக்கும் அண்ணாத்த.. அடுத்த அட்டகாசமான Update என்ன தெரியுமா..?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

More Stories

Trending News