அதிக குழந்தைகள் பெற்றுக்கொண்ட தமிழ் பிரபலங்கள்! யார் யாருன்னு பாருங்க..

Tamil Celebrities With More Than Two Kids : நடிகர் சிவகார்த்திகேயன் மூன்றாவதாக குழந்தை பெற்றுக்கொள்ள இருப்பதாக கூறப்படும் நிலையில், தமிழ் திரையுலகில் 2ற்கும் அதிகமான குழந்தைகளை பெற்றுக்கொண்ட பிரபலங்கள் பெயர்களை இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : May 30, 2024, 06:14 PM IST
  • 2 குழந்தைகளுக்கும் மேல் குழந்தை பெற்றுக்கொண்ட பிரபலங்கள்
  • லிஸ்டில் ரம்பா, ராதா உள்பட பலர்
  • புதிதாக இணைந்த பிரபல நடிகர்!
அதிக குழந்தைகள் பெற்றுக்கொண்ட தமிழ் பிரபலங்கள்! யார் யாருன்னு பாருங்க.. title=

Tamil Celebrities With More Than Two Kids : தமிழ் திரையுலகில் இருக்கும் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர், இரண்டிற்கும் அதிகமான குழந்தைகளை பெற்றுக்கொண்டுள்ளனர். அவர்கள் யார் யார் என்பதையும்,  அவர்களுக்கு எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்பதையும் இங்கு பார்ப்போம். 

ராதா:

80ஸ் குழந்தைகளின் கனவு கன்னியாக விளங்கியவர், ராதா. அவரது இளமை காலத்தில், சிவாஜி, மோகன், என பல்வேறு புகழ்பெற்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இவர், 1991 ஆம் ஆண்டு ராஜசேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் இருக்கின்றனர். இதில் மகள்களான கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் ஆகியோர் தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்த பிறகு திருமணமாகி செட்டில் ஆகிவிட்டனர். மகன் விக்னேஷ் நாயர் சுயதொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. 

ஹரி - பிரீத்தா விஜயகுமார்: 

இயக்குனர் அரிக்கும், நடிகை பிரீத்தா விஜயகுமாருக்கும் 2002 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஹரி, தொடர்ந்து படங்களை ஏற்று வந்தாலும், பிரீத்தா திருமணத்திற்கு பிறகு திரை உலகில் இருந்து விலகி விட்டார். இவர்களுக்கு, மூன்று மகன்கள் இருக்கின்றனர். 

ரம்பா: 

சாதாரணமாக ‘ரம்பா’, எனக் கூறுவதை விட தொடை அழகி ரம்பா என்று இவரை குறிப்பிடலாம். ஒரு காலத்தில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த பிரபல நாயகியாக இருந்த இவர், திருமணத்திற்கு பிறகு மொத்தமாக சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார். இவருக்கு இலங்கையை சேர்ந்த இந்திரகுமார் பத்மநாபன் என்பவர் உடன் 2010 ஆம் ஆண்டு திருமண நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கின்றன. குடும்பத்துடன் இவர் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. 

சன்னி லியோன்: 

பாலிவுட் திரையுலகில் கொடிகட்டி பறந்த கவர்ச்சி நடிகை சன்னி லியோன். ஆபாச படங்கள் மூலம் பிரபலமானவராக இருந்தாலும், ஏழை எளியோற்கும் மிருகங்களுக்கும் கருணை காட்டும் நல்ல உள்ளம் கொண்டவர் சன்னி லியோன். இவர் டானியல் வெப்பர் என்பவரை 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமான பெண்கள் இவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து கொண்டனர். பின்னர் இவர்களுக்கு சரோகேசி மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன. 

மேலும் படிக்க | Mahesh Babu : அப்பாவை அப்படியே உரித்து வைத்திருக்கும் மகேஷ் பாபுவின் மகன்! வைரல் போட்டோஸ்..

வனிதா விஜயகுமார்: 

தமிழ் பிரபலங்களுள், சர்ச்சைக்கு பெயர் போனவர் வனிதா விஜயகுமார். இவர், 2000 ஆண்டு துணை நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணம் முடிவில் முடிய, 2007 ஆம் ஆண்டு ஆனந்த் ஜெயராஜன் என்பவரை திருமணம் செய்தார். இந்த திருமணங்கள் மூலம் இவருக்கு, இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை என மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். 

சிவகார்த்திகேயன்: 

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து, தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக வளர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன். திரையுலகில் பிரவேசிப்பதற்கு முன்பே குடும்ப தலைவரான இவர், 2010 ஆம் ஆண்டில் தனது முறை பெண்ணான ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2013ஆம் ஆண்டு ஆராதனா என்ற பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு இவர்களுக்கு, ஆண் குழந்தை பிறந்தது. இதற்கு குகன் தாஸ் என பெயர் வைத்தனர். தற்போது சிவகார்த்திகேயனின் மனைவி மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் சமீபத்தில் ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் ஆர்த்தி கர்ப்பமாக இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. 

மேலும் படிக்க | Sivakarthikeyan : சிவகார்த்திகேயனுக்கு 3வது குழந்தை? வைரலாகும் பாேட்டோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News