சாணிக்காயிதம் படத்தின் டப்பிங் நிறைவு! விரைவில் ஓடிடியில் ரிலீஸ்!

செல்வராகவன் முதல்முறையாக கதாநாயகனாக நடிக்கும் சாணிக்காயிதம் படத்தில் தந்து டப்பிங்கை முடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 29, 2021, 07:19 PM IST
சாணிக்காயிதம் படத்தின் டப்பிங் நிறைவு! விரைவில் ஓடிடியில் ரிலீஸ்! title=

செல்வராகவன் (Selvaragavan) முதல்முறையாக கதாநாயகனாக நடிக்கும் சாணிக்காயிதம் (Saanikaayidham) படத்தில் தான் நடித்த காட்சிகளுக்கு டப்பிங்கை முடித்து விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  இது ஒரு மறக்க முடியாத பயணம் என்றும் தெரிவித்துள்ளார். 

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் ஆரண்ய காண்டம் என்ற படத்தில் உதவி இயக்குநராகவும்,  இறுதிச்சுற்று படத்தின் வசன எழுத்தாளருமான  அருண் மாதேஸ்வரன் செல்வராகவனையும் கீர்த்தி சுரேஷையும் வைத்து ‘சாணிக் காயிதம்’ (Saanikaayidham) படத்தை இயக்கினார்.  இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 18-ஆம் தேதி நிறைவடைந்தது.  இயக்குனர் செல்வராகவன் முதல் முறையாக நடிகராக அறிமுகமாவுள்ள திரைப்படம் 'சாணிக்காயிதம் '. செல்வராகவனின் பிறந்தநாளான மார்ச் 5ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.  தன்னை மையப்படுத்தி எடுக்கும் படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது சாணிக்காகிதம் படத்தில் நடித்து வருகிறார். 

 

இப்படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரர் இயக்கத்தில் ஏற்கனவே தயாராகியுள்ள ‘ராக்கி’ என்ற படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.  வசந்த் ரவி, பாரதிராஜா போன்ற நடிகர்கள் ராக்கி படத்தில் நடித்துள்ளனர்.  இப்படம் வெளியாகும் முன்பே,  'சாணிக்காகிதம்' படத்தையும் பிசியாக இயக்கி வருகிறார். ராக்கி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

தற்போது சாணிகாயிதம் படத்தின் டப்பிங் வேலைகள் முடிந்ததால் விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  சாணிகாயிதம் படம் திரையரங்கை தவிர்த்துவிட்டு நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.  சாணிகாயிதம் படத்தில் முகம் நிறைய தாடியுடன் காணப்பட்ட செல்வராகவன் தற்போது அதனை எடுத்துள்ளார். இந்த புதிய கெட்டப் பீஸ்ட் படத்திற்காக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ALSO READ ஆயிரத்தில் ஒருவன்: உண்மையை போட்டுடைத்த செல்வராகவன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News