Vadivelu: இம்சை அரசனின் இம்சைகள் தீர்ந்தன, இனி புயலாய் நடிப்பார் வைகைப்புயல் வடிவேலு

வைகைப் புயலின் திரைவாழ்க்கையில் அடித்த புயல் ஓய்ந்துவிட்டது. இனி வசந்தம் வீசும் என்று நம்பலாம். இம்சை அரசன் 24ம் புலிகேசி வரார் பராக்! பராக்!!

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 27, 2021, 11:32 PM IST
  • இம்சை அரசனின் இம்சைகள் தீர்ந்தன,
  • வைகைப்புயலின் வாழ்வில் இனி வசந்தம் வீசும்
  • இனி இம்சை அரசன் 24ம் புலிகேசிக்கு காட்டியம் கூறலாம்
Vadivelu: இம்சை அரசனின் இம்சைகள் தீர்ந்தன, இனி புயலாய் நடிப்பார் வைகைப்புயல் வடிவேலு title=

சென்னை: நகைச்சுவை நடிகர் வடிவேலுவிற்கு பெரிய ஆறுதல் கிடைத்துவிட்டது. ஆம், இயக்குநர் சங்கருடனான அவரது மோதல்கள் முடிவுக்கு வருகிறது. இனி நடக்கப்போவது என்ன?

வடிவேலுவுக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இருவரும் முயற்சிகளை மேற்கொண்டனர். இம்சை அரசன் 23 வது புலிகேசி திரைப்படத்தின் அடுத்த பாகமான 'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி' படத்தின் படப்பிடிப்பின் போது நிகழ்ந்த கசப்பான நிகழ்வுகளுக்குப் பிறகு கடந்த சில ஆண்டுகளாக இருவருக்கும் இடையில் உரசல்கள் இருந்தன.

இந்த நிலையில், பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் வடிவேலு, தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கு ரெட் கார்டு போடப்பட்டிருந்தது. இன்று ( ஆகஸ்ட் 27, வெள்ளிக்கிழமை) வைகை புயல் மீதான தடை அகற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்சை அரசன் 23 வது புலிகேசி, வடிவேலுவின் பிளாக்பஸ்டர் வெற்றிகளில் ஒன்றாகும், வடிவேலு கதாநாயகனாக நடித்த முதல் படம் இதுவாகும். சிம்பு தேவன் இயக்கிய 23ம் புலிகேசியிஐ இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பு பேனரான 'எஸ் பிக்சர்ஸ்' கீழ் தயாரித்தது. 2006 இல் வெளியான இந்த திரைப்படம் வடிவேலுவின் திரையுலக வாழ்க்கையில் மைல்கல் என்றே சொல்லலாம்.

பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த வடிவேலு, அரசியலில் ஈடுபட்ட பிறகு திரையுலகில் பின்னடைவை சந்தித்தார். அதோடு, சக நகைச்சுவை நடிகர்களுடனும் வீண் வம்பு வளர்த்ததாகவும் வடிவேலு மீது குற்றம் மனத்தாங்கல்கள் இருந்தன. இதனால், வடிவேலுவின் திரையுலக வாழ்க்கை மேலும் சரிந்தது.

ஐந்து வருடங்களுக்கும் மேலாக சுணங்கிப் போயிருக்கும் வடிவேலுவின் திரைப்பயணம் எதிர்பார்த்த உயரத்தை எட்டவில்லை, அவர் தெனாலிராமன், எலி, கத்தி சண்டை மற்றும் சிவலிங்காவில் தோன்றினார்.பின்னர் விஜய் நடித்த மெர்சல் படத்தில் ஒரு துணை வேடத்தில் நடித்தார், இது ஒரு குறிப்பிடத்தக்க மறுபிரவேசத்தைக் குறித்தது.

ALSO READ | நகைச்சுவை நடிகர் புரோட்டா சூரிக்கு சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி பிறந்தநாள்

2018 ஆம் ஆண்டில், சிம்பு தேவனுடன் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசியில் வேலை செய்ய வடிவேலு ஒப்புக்கொண்டார், அதன் முதல் பாகத்தின் தொடர்ச்சியான இந்த திரைப்படம், இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பு

சென்னையில் பிரம்மாண்ட செட்களை நிறுவி படப்பிடிப்பின் முதல் கட்ட படபிடிப்புகளை தொடங்கிய சில நாட்களிலேயே வடிவேலுவுக்கும் படக்குழுவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

வடிவேலு தனது ஆடை வடிவமைப்பாளர் தொடர்பான பிரச்சினையில் இயக்குனருடன் மோதலில் ஈடுபட்டதாகவும், பின்னர் அவர் படப்பிடிப்புக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. சர்ச்சையை அடுத்து வடிவேலு படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை, ஒரு திரைப்பட தயாரிப்பாளராக, சங்கர் வடிவேலு மீது வழக்கு தொடர்ந்தார்.

வடிவேலுக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கம் ஆகியவற்றில் ஷங்கர் புகார் அளித்தார் மேலும் நடிகர் வடிவேலு படப்பிடிப்புக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் கூறினார். வடிவேலு இல்லாததால், தனக்கு7 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் சங்கர் புகார் தெரிவித்திருந்தார்.

READ ALSO | நானியின் டக் ஜெகதீஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

புகாரின் அடிப்படையில், தயாரிப்பாளர்கள் கவுன்சில் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க தடை விதித்தது. தடை காரணமாக, வடிவேலு திரைப்படங்களில் நடிக்க முடியவில்லை. தனது திரையுலக வாழ்க்கை முடிவுக்கு வந்த நிலையில் இருந்த வடிவேலு, ஒரு சில கந்து வட்டி ஆர்வலர்கள் திரைப்படத் துறையில் தனது வளர்ச்சியைத் தடுக்க முயற்சிப்பதாகக் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.

சமீப காலங்களில், சங்கர் மற்றும் வடிவேலு இடையே தடையை நீக்குவது தொடர்பாக பல பேச்சுவார்த்தைகள் நடந்தன, மேலும் தயாரிப்பாளர் அமைப்பும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் பேச்சுவார்த்தையில் இணக்கமான முடிவு ஏதும் எட்டபடவில்லை.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் இணக்கமாக செல்ல உடன்படாததால் அது இறுதியில் தோல்வியடைந்தது. இதன் பின்னணியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆகஸ்ட் 27ம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டது.

READ ALSO | விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த நான்கு படங்களின் அப்டேட்கள்!

அதில் வடிவேலு மீது சங்கர் அளித்த புகார் தொடர்பாக, மன்ற உறுப்பினர்கள், நடிகர் வடிவேலு மற்றும் சங்கரின் எஸ் பிக்சர்ஸ் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்றும், இறுதியாக இந்த விவகாரத்தில் சுமூக முடிவு எட்டப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

பல வருட சர்ச்சை முடிவுக்கு வந்ததால், வடிவேலுவின் தீவிர ரசிகர்கள் இந்த செய்தியை கொண்டாடுகிறார்கள், இந்த தீர்மானத்தை அவர்கள் வரவேற்கிறார்கள் மற்றும் இம்சை அரசன் 24 வது புலிகேசியின் படப்பிடிப்பில் வடிவேலு விரைவில் பங்கேற்பார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வடிவேலு மீதான தடை நீக்கப்பட்டுள்ளதால், வடிவேலு இப்போது புதிய திரைப்படங்களில் நடிக்கலாம். நகைச்சுவையில் வடிவேலுவின் இரண்டாம் இன்னிங்ஸ் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ஒரு திரைப்படத்தில் அவரும் இணைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லாம் சரியாக நடந்தால், இந்த வருடத்திற்குள் வடிவேலு மீண்டும் ஒரு சுற்று வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

ALSO READ | சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் Second Look வெளியானது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News