'குஷி' படத்தில் நடிக்கும் மற்றொரு விஜய்! வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிக்கும் 'குஷி' படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 16, 2022, 12:59 PM IST
  • விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'குஷி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.
  • டிசம்பர் மாதம் 23ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
  • சமந்தா விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிக்கிறார்.
'குஷி' படத்தில் நடிக்கும் மற்றொரு விஜய்! வெளியானது ஃபர்ஸ்ட் லுக்! title=

ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிக்கும் காமெடி கலந்த ரொமான்டிக் திரைப்படத்திற்கு 'குஷி' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.  குஷி படத்தை படக்குழு இந்த ஆண்டு இறுதியில், அதாவது டிசம்பர் மாதம் 23ம் தேதி வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது.  படத்தின் பர்ஸ்ட் லுக்கிலும் டிசம்பர் 23ம் தேதி படம் வெளியாகும் என்கிற தகவல் இடம்பெற்று இருக்கிறது.  விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகியோர் இடம்பெற்று இருக்கும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருவரின் ஜோடி பொருத்தமும் கண்ணைப்பறிக்கும் விதமாக அமைந்துள்ளது.

Khushi

மேலும் படிக்க | சினிமாவில் இருந்து விலகுகிறேன் - உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

இந்த போஸ்டர் நல்ல ஒரு வைபை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது, மேலும் இந்த போஸ்டரை பார்க்கும்போதே படம் நல்ல கலர்புல்லான ரொமான்டிக் படமாக இருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது.  ஸ்க்ரீனில் இந்த இரண்டு முன்னணி நட்சத்திரங்களின் ஜோடி பார்ப்பதற்கு அழகாக உள்ளதாக ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.  இந்த திரைப்படத்தில் ஜெயராம், சச்சின் கேதாகர், முரளி சர்மா, லட்சுமி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் அய்யங்கார் மற்றும் சரண்யா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

நவீன் ஏர்னெனி மற்றும் ரவிசங்கர் எலமஞ்சிலி ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் இந்த படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்து இருக்கிறார்.  படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பீட்டர் ஹெய்ன்ஸ் பணியாற்றியுள்ளார், மேலும் பல்லவி சிங், ராஜேஷ், ஹர்மன் கவுர் போன்றோர் படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ளனர்.  டிசம்பர் 23ம் தேதி வெளியாகவுள்ள இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.  இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஜம்மு காஸ்மீரில் நடைபெற்று வருகிறது.  சமந்தா நடிப்பில் சாகுந்தலம் என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது.

மேலும் படிக்க | விக்ரம் புரோமோஷனுக்கு பிரபல யூ டியூப் சேனலில் களமிறங்கும் கமல்ஹாசன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News