காதல் கசியுமா? ரத்தம் கசியுமா? விஜய் சேதுபதி நடிக்கும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ ரிலீஸ் தேதி வெளியீடு..!

Merry Christmas Release Date Revealed: பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்-விஜய் சேதுபதி நடிக்கும் மெரி கிறிஸ்துமஸ் படத்தை கிறிஸ்துமஸ் திருநாளுக்கு முன்னாளேயே வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Jul 17, 2023, 04:47 PM IST
  • விஜய் சேதுபதி முதன் முறையாக பாலிவுட்டில் ஹீரோவாக நடித்துள்ள படம், மெரி கிறிஸ்துமஸ்.
  • தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகியுள்ளது.
  • படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
 காதல் கசியுமா? ரத்தம் கசியுமா? விஜய் சேதுபதி நடிக்கும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ ரிலீஸ் தேதி வெளியீடு..! title=

ரசிகர்களால் “மக்கள் செல்வன் ” என் அன்போடு அழைக்கபடும் நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட்டில் முதன் முதலாக ஹீரோவாக நடித்திருக்கும் படம் “மெரி கிறிஸ்துமஸ்”. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடித்திருக்கிறார். இதன் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. 

“மெரி கிறிஸ்துமஸ்..”

இந்தியா முழுவதும் பரபவலாக கொண்டாடப்படும் திருநாட்களுள் ஒன்று, கிறிஸ்துமஸ். இந்த நாளில் நடக்கும் ஒரு சம்பவம், ஒரு காதல் ஜாேடியின் வாழ்வையே திருப்பி போடுகிறது. இந்த  ஒன்லைன் ஸ்டோரியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம், மெரி கிறிஸ்துமஸ். பேய்-ஹாரர்-த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. மெரி கிறிஸ்துமஸ் படத்தின் ரிலீஸ் இந்த வருட கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | இலியானா குழந்தைக்கு இவர்தானா தந்தை? பெரிய ட்விஸ்டுடன் போட்டோவை பதிவிட்ட நடிகை

ரிலீஸ் தேதி..

அனைத்து வருடங்களை போலவே இந்த வருடமும் கிறிஸ்துமஸ் திருநாள் டிசம்பர் 25 அன்று கொண்டாடப்பட உள்ளது. முன்னர் வெளியிடப்பட்டிருந்த மேரி கிறிஸ்துமஸ் பட போஸ்டரில் “கிறிஸ்துமஸ் அன்று சந்திப்போம்..” என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், அப்படம் டிச., 25 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தை முன்கூட்டியே வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. கிறிஸ்துமஸ் தினத்திற்கு 10 நாட்களுக்கு முன்னரே இப்படம வெளியாகவுள்ளது. டிசம்பர் 15 அன்று மெரி கிறிஸ்துமஸ் படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

முதன்முறையாக பாலிவுட் ஹீரோ..

தமிழில் ‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாக விஜய் சேதுபதி அதற்கு முன்னர் பல படங்களில் துணை கதாப்பாத்திரமாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் உடன் இணைந்து ‘ஃபர்ஸி’ என்ற தொடர் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார், விஜய் சேதுபதி. அதன் பிறகு, இவர் ‘மாநகரம்’ படத்தின் இந்தி ரீ-மேக்கில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதுவரை குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் வில்லன் கதாப்பாத்திரங்களிலும் இந்தி சினிமாவில் நடித்து வந்த அவர், தற்போது முதன் முறையாக ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் க்ளைமேக்ஸிலேயே இதற்கான ஹிண்டையும் அவர் கொடுத்து விட்டார். 

இரு மொழிகளில் வெளியாகிறது..

மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தை, டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் Matchbox pictures தயாரித்து வழங்குகிறது. ஜானி கதார், பத்லாபூர் மற்றும் அந்தாதுன் படங்களை இயக்கிய இயக்குநர் ஶ்ரீராம் ராகவன் இந்த படத்தை இயக்கி உள்ளார். இது இவருடைய முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது, அதே போல கத்ரினா கைஃப்  முதல் முறை தமிழில் அறிமுகமாகுகிறார். இந்த படம் தமிழிலும் இந்தியிலும் உருவாகி வருகிறது. ஶ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் இருந்து இந்த படம் சற்று வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

வெவ்வேறு கதாப்பாத்திரங்கள்..

மெரி கிறிஸ்துமஸ் இரண்டு மொழிகளில் வெவ்வேறு துணை நடிகர்களுடன் படமாக்கப்பட்டுள்ளது. தமிழ் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெய் பாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர்  நடித்துள்ளனர், அதே நேரத்தில் அதே வேடங்களில் இந்தி பதிப்பில் சஞ்சய் கபூர், வினய் பதக், பிரதிமா கண்ணன், டின்னு ஆனந்த் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

சிறந்த பொழுது போக்கு படமாக இருக்கும்..

மெரி கிறிஸ்துமஸ் படத்தில் பரி என்ற குழந்தை நடிகரும் அறிமுகமாகிறார். அஸ்வினி கல்சேகர் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் சிறப்பு தோற்றத்தில்  நடித்துள்ளனர்.  இந்த படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாகவும், பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையிலும் இருக்கும் என எதிர்பார்க்கலாம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | ‘நீ பற்ற வைத்த நெருப்போன்று..’ விக்ரமனை தாக்கினாரா ‘பிக்பாஸ்’ வெற்றியாளர் அசீம்..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News