நடந்து முடிந்த புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களையும் அதன் கூட்டணி கட்சியான திமுக 2 இடங்களையும் கைப்பற்றின. ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் வெறும் 8 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி ஆட்சியை இழந்தது.
எனவே காங்கிரஸ்-திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க இருந்தது. ஆனால் முதல்வராக வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் நீடித்து வந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி மற்றும் புதுசேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், முன்னாள் தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் இடையே முதல்வர் பதவிக்கான போட்டி நிலவுயது. ஆனால் அதற்க்கு முற்றுபுள்ளி வைக்க்கப்பட்டது.
அதாவது புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நமச்சிவாயம், வைத்திலிங்கம் ஆகியோர் நாராயணசாமியை பெயரை முன்மொழிந்தனர். இதனால் நாராயணசாமி புதுச்சேரி முதல்வராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.