கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொடர்பான பல்வேறுவிதமான ஆராய்ச்சிகளும் உலகெங்கிலும் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆராய்ச்சிகளின் ஒருபகுதியாக, கொரோனா வைரஸை (SARS-CoV-2) மோப்ப நாய்கள் அடையாளம் காணுமா என்ற ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில், 90 சதவிகிதத்திற்கும் அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்களை அடையாளம் காண, நாய்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட முடியும் என்று தெரியவந்துள்ளது.
அறிகுறிகள் இல்லாத கொரோனா பாதிப்பையும்ம் நாய்களால் கண்டறிய முடியும் என அந்த ஆய்வு கூறுகிறது.
Sweat-sniffer dogs make Thai debut as coronavirus detectors https://t.co/JgzTDCo0ge pic.twitter.com/cVFxr7U5xf
— Reuters (@Reuters) May 21, 2021
இது கொரோனா பாதிப்பு உள்ளவர்களை கண்டறிய மிகச் சிறந்த உதவியாக இருக்கும். அதிலும், மோப்ப நாய்களின் உதவியைப் பயன்படுத்தி ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை சுலபமாக கண்டறியலாம். தொற்று இல்லாதவர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
Also Read | Cyclone Yaas: மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டது, மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றம்
புற்றுநோய், மலேரியா போன்ற நோய்களை நாய்களால் கண்டறிய முடியும் என்பது ஏற்கனவே நிரூபணமாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வெளியாகும் வாடையை நாய்களால் கண்டறிய முடியுமா என்றா ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வை London School of Tropical Medicine அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்டனர்.
இதன் அடிப்படையில், வெளிநாடுகளில் இருந்து விமான நிலையங்களில் வந்து இறங்குபவர்களில் 91 சதவிகிதத்தினரை மோப்ப நாய்கள் கண்டறியும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சியின் முடிவு நம்பிக்கை அளித்துள்ளது.
Also Read | Coronavirus Updates: இந்தியாவில் கோவிட் இறப்புகள் 3 லட்சத்தை தாண்டியது
பிற COVID-19 பரிசோதனைகளைக் காட்டிலும், நாய்களால் விரைவாகக் கிருமித்தொற்றைக் கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்த ஆய்வை, பிற ஆய்வாளர்கள் இன்னும் மதிப்பீடு செய்யவில்லை. மதிப்பீடுகள் செய்யப்பட்டு, முடிவுகள் சாதகமாக வந்தால், கொரோனா பாஸிடிவ் நோயாளிகளை நாய்களே கண்டுபிடித்துவிடும்.
மோப்ப நாய்கள், மனிதர்கள் அணியும் சாக்ஸ் போன்றவற்றை நுகர்ந்து “கொரோனா வாசனையை”கண்டறியும் என்று பிரிட்டனை சேர்ந்த் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Also Read | RowdyBaby சூப்பர் ஹிட் கொடுத்த பிரபுதேவா-தனுஷ் மீண்டும் இணைகிறார்களா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR