கடந்த ஏப்ரல் 27 ஆம் தென் கொரியா மற்றும் வட கொரியா நாட்டி தலைவர்களும் சந்தித்து பேசிக்கொண்டனர். இதனை வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு என உலக நாடுகள் பாராட்டினர்.
இதனையடுத்து, கடந்த மே மாதம் 4 ஆம் தேதி அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் பேச்சு நடத்த தயார் என்று வடகொரிய அதிபர் கிம் அறிவித்தார். வரும் ஜூன் 12 ஆம் தேதி வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதையடுத்து அமெரிக்க மற்றும் தென்கொரிய நாடுகளின் உயர்மட்ட தூதரக அதிகாரிகள் சந்திப்பு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் சில காரணங்களால் இந்த சந்திப்பு ரத்து செய்யப்பதுவதாக தகவல்கள் வெளியாகின.
இந்த தகவலை அடுத்து வடகொரிய அதிபரின் உதவியாளர் கிம் யாங் சோல் தலைமையிலான பிரதிநிதிகள், அமெரிக்கா பிரதிநிதிகளுடன் பேச்சு வாரத்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் திட்டமிட்டபடி ஜூன் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உளதுஉள்ளது.