நிவர் புயலால் பாதிக்கப்பட்ட சிகிச்சை திட்டங்கள்: பரிதாபமாக இறந்த MP Doctor

மருத்துவர் சுபம் உபாத்யாய், மத்திய பிரதேசத்தின் (Madhya Pradesh) சாகரில் உள்ள அரசு புண்டேல்கண்ட் மருத்துவக் கல்லூரியில் கோவிட் -19 நோயாளிகளுக்கு மருத்துவ அதிகாரியாக சிகிச்சை அளித்து வந்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 26, 2020, 10:59 AM IST
  • கோவிட் தொற்றால் காலமானார் மத்திய பிரதேச இளம் மருத்துவர்.
  • சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை நடக்கவிருந்தது.
  • நிவர் புயல் காரணமாக அவரால் சென்னை செல்ல முடியாமல் போனது.
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட சிகிச்சை திட்டங்கள்: பரிதாபமாக இறந்த MP Doctor  title=

புதுடெல்லி: போபாலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வைரஸை எதிர்த்து சுமார் ஒரு மாத காலமாக போராடி வந்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது மருத்துவர், கொடிய கொரோனா வைரசால் சிகிச்சை பலனின்றி புதன்கிழமையன்று இறந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் COVID-19 தொற்று, இந்த இளம் மருத்துவரின் நுரையீரலைப் பாதித்ததாகக் கூறப்படுகிறது. அவரைக் காப்பாற்ற இருந்த ஒரே வழியாக மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே இருந்தது.

சென்னையில் (Chennai) உள்ள ஒரு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று அவருக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்ய எற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், நிவர் சூறாவளி (Nivar Cyclone) காரணமாக அனைத்து விதமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால், இருந்த ஒரே வழியிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

பி.டி.ஐ.-யிடம் பேசிய சிரயு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் அஜய் கோயன்கா, “டாக்டர். சுபம் உபாத்யாயா (26) கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுக்கு ஆளானார். அவரது நுரையீரல் 100 சதவீதம் பாதிக்கப்பட்டு நவம்பர் 10 முதல் இங்கு சிகிச்சை பெற்று வருகிறார்” என்றார்.

ALSO READ: ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடையும் COVID Vaccine: திட்டத்துடன் தயாராகிறது அரசு

மருத்துவர், சுபம் உபாத்யாய், மத்திய பிரதேசத்தின் (Madhya Pradesh) சாகரில் உள்ள அரசு புண்டேல்கண்ட் மருத்துவக் கல்லூரியில் கோவிட் -19 நோயாளிகளுக்கு மருத்துவ அதிகாரியாக சிகிச்சை அளித்து வந்தார்.

அவரது மறைவுக்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் (Shivraj Singh Chauhan) இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், முதல்வர், “டாக்டர். ஷுபம் நாட்டின் உண்மையான குடிமகன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்துள்ளார். தன்னலமற்று, அர்ப்பணிப்புடன் COVID-19 நோயாளிகளுக்கு சேவை செய்தார். ஆனால், இந்த சேவையின் போது தானே இந்த கொடிய தொற்றால் பாதிக்கப்பட்டார். நாங்கள் அவரைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம், இந்த கடினமான சூழ்நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்களுடன் அரசாங்கம் துணையாக நிற்கும்” என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ: Shocking: Corona Virus-ஐ விட ஆபத்தான கொரோனாவின் பின் விளைவுகளைப் பற்றி தெரியுமா

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News