பரப்பரப்பான அரசியல் சூழலில் டிரம்பை பேட்டி எடுக்கும் சித்தார்த்!!

பரப்பரப்பான அரசியல் சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பேட்டி எடுக்க வேண்டும் என்று நடிகர் சித்தார்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்!!

Last Updated : May 4, 2019, 03:23 PM IST
பரப்பரப்பான அரசியல் சூழலில் டிரம்பை பேட்டி எடுக்கும் சித்தார்த்!! title=

பரப்பரப்பான அரசியல் சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பேட்டி எடுக்க வேண்டும் என்று நடிகர் சித்தார்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்!!

தமிழ் திரையுலகில் பாய்ஸ், அரண்மனை 2 உள்ளிட்ட படங்களின் மூலம் அறிமுகமானவர் சித்தார்த். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி திரையுலகிலும் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் சித்தார்த் சினிமா மட்டுமின்றி சமூக பிரச்னைகள் மற்றும் அரசியல் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வருவார். அந்த கருத்துகள் சர்ச்சைக்கு வழிவகுக்கும். தற்போதும் அதேபோல் அவர் செய்த ஒரு விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ டொனால்ட் ட்ரம்ப் அவர்களே, நீங்கள் தற்போது தேர்தலுக்கு தயாராகி வருவதால் எனக்கு நீங்கள் ஒரு பேட்டி கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். நீங்கள் என்ன சாப்பிடுவீர்கள், நீங்கள் எப்படி தூங்குவீர்கள், உங்களுடைய அழகின் ரகசியம் என்ன என்பது குறித்து நிறைய கேள்விகள் என்னிடம் இருக்கிறது. என்னிடம் இந்திய பாஸ்ப்போர்ட் இருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

மேலும்,  "அக்ஷய்குமார் ஒரு வில்லனாக மிகவும் குறைவாக மதிப்பிடப்படுகிறார்" எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பரபரப்பான அரசியல் சூழலில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது. 

 

Trending News