திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா வெளியிட்ட முதல் வீடியோ!

நடிகை சமந்தா முதல் முறையாக தங்களுடைய திருமண வீடியோவை இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்!

Last Updated : Jun 12, 2018, 05:19 PM IST
திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா வெளியிட்ட முதல் வீடியோ!

நடிகை சமந்தா முதல் முறையாக தங்களுடைய திருமண வீடியோவை இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்!

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா, இவர்கள் இருவரும் சேர்ந்து ‘யே மாய சேசவே’, ‘மனம்’ மற்றும் ‘ஆட்டோ நகர் சூர்யா’ ஆகிய தெலுங்குப் படங்களில் ஒன்றாக நடித்தனர். 

ஒன்றாக நடித்தபோது இருவரும் காதலில் விழுந்தனர். பின்னர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் இவர்கள் இருவரும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். இந்நிலையில் இவர்களது இந்து முறை மற்றும் கிறிஸ்தவ முறை திருமணம் கடந்த வருடம் அக்டோபர் 6-ம் மற்றும் 7-ம் தேதி நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா பிஸியாக நடித்து வருகிறார். இவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தற்போது விஷாலுடன் 'இரும்புத்திரை', சிவகார்த்திகேயனுடன் 'சீமராஜா', விஜய்சேதுபதியுடன் 'சூப்பர் டீலக்ஸ் மற்றும் நடிகையர் திலகம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நேரத்தில் நடிகை சமந்தா தங்களுடைய திருமண வீடியோவை இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது தங்களது திருமணத்திற்கு பிறகு வெளியிட்ட முதல் வீடியோ என்பதால் சமூக வலைதல பக்கங்களில் வைரலாக பரவி வருகின்றது.

More Stories

Trending News