'இதுக்கு கண்டிப்பா கல்யாணம் ஆயிடுச்சு': குரங்கு செய்த வேலை, வைரல் வீடியோ

Funny Monkey Video: 'அட இது சூப்பரா இருக்கே' என இணையவாசிகளை வியக்க வைக்கும் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது. இதில் குரங்கு ஒன்று செய்யும் செயலை நம்மால் நம்ப முடியவில்லை. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 4, 2023, 03:00 PM IST
  • ஒரு குரங்கு மிக நேர்த்தியாக துணி துவைப்பது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இது தற்போது வைரலாகி வருகிறது.
  • வைரலாகி வரும் வீடியோவில் காணாப்படும் காட்சியை யாராலும் நம்ப முடியவில்லை.
'இதுக்கு கண்டிப்பா கல்யாணம் ஆயிடுச்சு': குரங்கு செய்த வேலை, வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

குரங்குகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. குரங்குகள் மனிதர்களின் மூதாதையர்களாக கருதப்படுகின்றன. அதாவது, மனிதர்களின் நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குரங்குகளைப் போல இருந்தன. காலப்போக்கில் மனிதன் தன் வாழ்க்கை முறையையும், உண்பதையும், உழைப்பதையும் முன்பைவிடச் சிறப்பாகச் செய்யத் துவங்கினான். வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தைக் கண்டான். மனிதர்களுடன் இருந்த தொடர்பு காரணமாகவோ என்னவோ, குரங்குகள் இன்றும் மனிதர்கள் செய்யும் பல செயல்களை அப்படியே செய்கின்றன. 

தொழில்நுட்ப வளர்ச்சியுடன், மனிதர்கள் தங்கள் வேலையை வசதியாக செய்ய இயந்திரங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இன்று பெரும்பாலான மக்கள் துணி துவைக்க இயந்திரங்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். ஒரு ஆண் கையால் துணி துவைத்தால், அவரை மனைவிக்கு அடங்கி, அஞ்சும் கணவன் என பலரும் கிண்டல் செய்கிறார்கள். பல விஷயங்களில் மனிதர்களை காப்பி அடிக்கும் குரங்கு, துணி துவைப்பதிலுமா அப்படி செய்யும்? ஆம்!! அப்படி ஒரு குரங்கு செய்துள்ளது. அதன் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

மேலும் படிக்க | Animal Video: ஜாகுவாரின் வேட்டையைப் பார்த்து அதிர்ந்து போய் நிற்பது யார் தெரியுமா? 

துணி துவைக்கும் குரங்கின் வைரலான வீடியோவை இங்கே காணலாம்: 

சமூக ஊடக பயனர்களால் கண்டுபிடிக்கப்பட்ட திருமணமான குரங்கு

ஒரு குரங்கு மிக நேர்த்தியாக துணி துவைப்பது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது. வைரலாகி வரும் வீடியோவில் காணாப்படும் காட்சியை யாராலும் நம்ப முடியவில்லை. குரங்கு துணி துவக்கும் விதத்தை பார்த்தால், இதில் அதற்கு பல ஆண்டு அனுபவம் இருப்பதை போல தெரிகிறது. வீடியோவின் தலைப்பில் 'ஒருவழியாக திருமணமான குரங்கை கண்டுபிடித்து விட்டோம்' என இந்தியில் எழுதப்பட்டுள்ளது. 

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை சமூக வலைதளவாசிகளும் ரசித்து பார்த்து வருகின்றனர். இந்த வைரலான வீடியோவை பார்த்தால், குரங்கு ஒரு நபர் துணி துவைப்பதைப் பார்த்து, அதன் பிறகு தானும் அதே போல் செய்வது தெரிகிறது. 

இந்த வீடியோவுக்கு இதுவரை 11 ஆயிரத்துக்கும் அதிகமான வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். மனைவிக்கு அஞ்சி கணவன்மார்கள் வேலை செய்வது போல, இந்த குரங்கும் தனது மனைவிக்கு அஞ்சி இந்த வேலையை செய்கிறது என பல பயனர்கள் இந்த வீடியோவின் கமெண்ட் செக்ஷனில் எழுதியுள்ளனர்.

மேலும் படிக்க | விடாமல் கொத்திய பாம்பு, கடித்துக் குதறிய கீரி: வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News