'த்ரிஷ்யம் 2' திரைப்படத்திற்கு குவியும் பாராட்டுகள் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் Drishyam திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு, இரண்டாம் பாகம் எப்போது என்று ஏங்கியவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறிவிட்டது.
திரைப்படத்துக்கு வந்து குவியும் பாராட்டு மழைகளில், உலகளவில் சிறந்த திரைப்படம் என கூறப்படும் பாகுபலி திரைப்பட இயக்குநர் ராஜமெளலியின் பாராட்டும் இணைந்துவிட்டது.
தமிழில் வெளியான பாபநாசம் திரைப்படம், மலையாள திரைப்படமான த்ருஷ்யத்தின் மறு ஆக்கம் தான். தற்போது, பாபநாசம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற கேள்விகளையும், த்ருஷ்யம் இரண்டாம் பாகம் எழுப்பியுள்ளது.
Also Read | Drishyam 2 மலையாள திரைப்படம்- புகைப்படத் தொகுப்பு
மலையாளத்தில் மோகன்லால் - ஜீத்து ஜோசப் இணைந்து வழங்கிய 'த்ரிஷ்யம்'. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி சக்கைப்போடு போடுகிறது 'த்ரிஷ்யம் 2' மலையாளத் திரைப்படம்.
இதனையடுத்து, பிற மொழிகளிலும் இரண்டாம் பாகத்தை எடுக்கும் வேலைகளும் தொடங்கிவிட்டன. அந்த வகையில் தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.
தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநரான ராஜமெளலி 'த்ரிஷ்யம் 2' படத்துக்குப் பாராட்டு தெரிவித்து ஜீத்து ஜோசப்பிற்கு அனுப்பிய செய்திய் அனுப்பியுள்ளார். பாராட்டுச் செய்தியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்த ஜீத்து ஜோசப் அதனை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
"வணக்கம் ஜீத்து, நான் இயக்குநர் ராஜமௌலி. சில நாட்களுக்கு முன் 'த்ரிஷ்யம் 2' பார்த்தேன். திரைப்படம் என் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தால், மீண்டும் முதல் பாகத்தைப் பார்த்தேன். முன்பு ஒரு முறை தெலுங்கில் வெளியான முதல் பாகத்தை பார்த்தேன்.
Also Read | நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் கிடைக்கும்: வைரல் ஆன பாஜக தலைவர் ட்வீட்
இயக்கம், திரைக்கதை, படத்தொகுப்பு, நடிப்பு என ஒவ்வொரு விஷயமும் அற்புதமாக இருந்தது என்பதை உறுதியாகச் சொல்கிறேன். கதை எழுதப்பட்ட விதம் உலகத் தரத்தில் இருக்கிறது.
முதல் பாகம் தலைசிறந்த படைப்பாக இருக்கும்போது, அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பது கொஞ்சம் சிரமமானதுதான். அது முதல் பாகத்தோடு எந்தச் சிக்கலுமில்லாமல் பொருந்திப் போவதும், முதல் பாகத்தில் இருந்த அதே அளவு பரபரப்போடு, ரசிகர்களைக் கட்டிப்போடும் வகையில் கதையை கொண்டு சென்றது என அனைத்துமே அசாதாரணமான அற்புதமான விஷயம். உங்களிடமிருந்து இன்னும் பல தலைசிறந்த படைப்புகள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்" என்று இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.
Also Read | Master திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு மைதானத்தில் அஸ்வின் ஆட்டம் வீடியோ Viral
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR