மத்திய பிரதேசம் அகர் மால்வா: கடந்த வருடம் கொரோனா காலத்தில் அமைச்சர் ராமதாஸ் அதாவாலேவின் "கோ கொரோனா, கொரோனா கோ" கோஷத்திற்குப் பிறகு, தற்போது அதேபாணியில் "ஓடு கொரோனா ஓடு" என்ற புதிய ஒன்று அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தின் அகர் மால்வா மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள கிராமவாசிகள் கொரோனா வைரஸுக்கு எதிராக கோஷங்களை எழுப்பும் வீடியோ கிளிப் வைரலாகியுள்ளது. அந்த வைரல் வீடியோவில், கிராமவாசிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு கைகளில் எரியும் தீப்பந்தங்களுடன் "ஓடு கொரோனா ஓடு" (Bhaag corona Bhaag) என்ற முழக்கங்களை முழக்கமிட்டனர்.
இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தின் அகர் மால்வா மாவட்டத்தின் கணேஷ்புரா கிராமத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
ஊடக அறிக்கையின்படி, அந்த கிராமத்தில் தொற்றுநோய் யாராவது பாதிக்கப் படும்போதெல்லாம், ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் தங்கள் வீடுகளில் இருந்து கிராமத்தின் எல்லைகள் வரை எரியும் தீ பந்தத்துடன் ஓடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன் பிறகு இந்த எரியும் தீப்பந்தங்கள் கிராமத்திலிருந்து வெளியேற்றப்படுகின்றன. கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் உட்பட எந்தவொரு தொற்றுநோயையும் ஒழிக்க இதுபோன்ற நடைமுறைகள் உதவுகின்றன என்று உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.
ALSO READ | பிரபல பிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் - வீடியோ வைரல்!
கிராமத்தில் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் கிராமவாசிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த நடைமுறையை மேற்கொண்டதிலிருந்து கிராமத்தில் எந்தவொரு நோயும் கண்டறியப்படவில்லை என ஒரு கிராமவாசி கூறியதாக கூறப்படுகிறது.
மத்திய பிரதேச ஹீத் துறையின் கூற்றுப்படி, ஏப்ரல் 21 அன்று 13,107 புதிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ள. இது மாநிலத்தில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு நாள் அதிகரிப்பு. மாநிலத்தின் இறப்பு எண்ணிக்கை 4,788 ஆக உயர்ந்தது,
இதுவரை, ஏப்ரல் மாதத்தில் மட்டும் த்திய பிரதேச மாநிலத்தில் 1,51,300 புதிய தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 802 இறப்புகளும் பதிவாகியுள்ளன.
ALSO READ | Watch Video: இனிப்பு கடையில் புகுந்த நாய், கடைக்காரர் செய்ததை பாருங்கள்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR