Video: சிறுவனுடன் Selfie எடுத்துக்கொண்ட விராட் கோலி!

சிறுவனின் வேண்டுகோளுக்கு இனங்க அவரடுன் விராட் கோலி செல்ஃபி எடுத்துக்கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Last Updated : Aug 22, 2018, 07:15 PM IST
Video: சிறுவனுடன் Selfie எடுத்துக்கொண்ட விராட் கோலி! title=

சிறுவனின் வேண்டுகோளுக்கு இனங்க அவரடுன் விராட் கோலி செல்ஃபி எடுத்துக்கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற இந்திய அணியின் கேப்டன் கோலி, இப்போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போட்டியின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதன் பின்னர் அங்கு கூடியிருந்த ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் கொடுத்து வந்தார். அப்போது அங்கிருந்த சிறுவன் தன்னுடன் செல்ஃபி எடுக்குமாறு தொடர்ந்து வேண்டினான். இதனையடுத்து சிறுவனிடம் இருந்த மொபைலினை பெற்று விராட் கோலி செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் பகிர்ப்பட்டு வருகிறது.

முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 93 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 103 ரன்களும் எடுத்த அணித்தலைவர் விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் அளிக்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கனக்கில் முன்னிலையில் உள்ளது!

Trending News