காற்றில் பறந்த பெண்... ஸ்டண்ட் பார்த்து அதிர்ந்த நெட்டிசன்ஸ்: திகில் வைரல் வீடியோ

Woman Stunt Viral Video: இந்த வீடியோவை பார்த்தால் உங்களால் நிச்சயமாக நம்ப முடியாது. இப்படிக்கூட செய்ய முடியுமா என யோசிக்கத் தொடங்குவீர்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 14, 2023, 12:05 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடகத் தளமான இன்ஸ்டாகிராமில் shalugymnast என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.
  • 5 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.
காற்றில் பறந்த பெண்... ஸ்டண்ட் பார்த்து அதிர்ந்த நெட்டிசன்ஸ்: திகில் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

சமூக ஊடகங்களில் தினமும் பல வித வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இவற்றில் பல நமக்கு பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், சில நம் வயிற்றில் புளியை கரைக்கின்றன. இப்போதெல்லாம் மக்கள் ரீல்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவதற்கு மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கவும் தயாராகி விடுகிறார்கள். இப்படிப்பட்ட செயல்களால் போலீஸில் மாட்டலாம், நீதிமன்றத்தில் ஆஜர் ஆக வேண்டிய நிலை ஏற்படலாம், உடலில் பெரிய காயங்கள் ஏற்பட்டு முடமாகலாம், உயிரே கூட போகலாம் என அனைத்தும் இவர்களுக்கு தெரியும். இருந்தும், ஒரே வீடியோ மூலம் இணையத்தில் ஹோரோ ஆகி விட வேண்டும் என்ற கனவில் அனைத்து வித ரிஸ்குகளையும் எடுக்க விரும்புகிறார்கள். 

தற்போதும் அப்படி ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இதை பார்த்து முடிப்பதற்குள் நம் இதயமே நின்று விடுகின்றது. இப்படி உயிரைப் பணயம் வைத்து வீடியோ எடுக்க வேண்டிய அவசியம் உள்ளதா என்ற கேள்விதான் நம் மனதில் தோன்றுகிறது. கரணம் தப்பினால் மரணம் என்பார்கள். இந்த வீடியோ அந்த கூற்றுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

ஸ்கூட்டியில் மாஸ் காட்டும் பெண்

சமீபத்தில் இணையத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டது. இதில் ஒரு பெண் ஸ்கூட்டியில் இருந்து குதிப்பதைக் காண முடிகின்றது. சேலை அணிந்து இந்த சாதனையை அந்த பெண் செய்துள்ளார். பெண் முதலில் கண்களை ஒரு துணி கொண்டு கட்டிக்கொள்வதை வீடியோவில் காண்கிறோம். அதன் பின்னர் அவர் ஸ்கூட்டியின் பின் இருக்கையின் விளிம்பில் நின்று காற்றில் தலைகீழாக குதிக்கிறார். அந்த பெண் பேக் ஃப்ளிப் செய்து தரையில் நேராக நிற்க முயன்றார். ஆனால் சமநிலை தவறியதால் கீழே விழுந்தார்.

எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்

இந்த வீடியோவை பார்த்தால், ‘இது எல்லாம் தேவையா?’ என்றுதான் நமக்கு முதலில் தோன்றுகிறது. இப்படிப்பட்ட ரிஸ்க் எடுத்து என்ன சாதிக்கப்போகிறார்கள்? அவர் தலையில் அடி பட்டிருந்தால், அது பெரிய பிரச்சனை ஆகியிருக்கும். உடல் ஊனம் ஏற்பட்டால், வாழ்நாள் முழுதும் பிரச்சனைதான். ஆகையால், ரீல்ஸ் உருவாக்குவது, வீடியோ போஸ்ட் செய்வது என அனைத்தும் வெறும் கேளிக்கைக்காகவே இருக்க வேண்டும். இவற்றின் மோகம் அதிகமானால் ஆபத்துதான்.

மேலும் படிக்க | கலிகாலம் தான்... எலும்பை மென்று சாப்பிடும் ஒட்டகசிவிங்கி... அதிர்ச்சியில் நெட்டிசன்கள்!

கதிகலங்க வைக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shalu Kirar (@shalugymnast)

வீடியோ வைரல் ஆனது

 

இந்த பெண் இந்த ஸ்டண்டை செய்துகொண்டிருக்கும் அந்த வழியாக ஸ்கூட்டியில் சென்ற மற்றொரு பெண் தன் ஸ்கூட்டியை நிறுத்தி இதை பார்க்கிறார். பெண் செய்யும் ஸ்டண்டை பார்த்து அந்த பெண் தன் வாயில் கை வைக்கிறார். இந்த வீடியோ சமூக ஊடகத் தளமான இன்ஸ்டாகிராமில் shalugymnast என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். 5 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். 

இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். சிலர் அந்த பெண்ணின் சாகசத்தையும் திறமையையும் பாராட்டியுள்ளார்கள். ஆனால், சிலரோ அப்பெண்ணை கடுமையாக விமர்சித்து உள்ளார்கள். ‘உயிரை பணயம் வைத்து இந்த வீடியோ தேவையா?’ என ஒரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | எகிப்தில் நீச்சலடித்தவரை உயிரோடு விழுங்கிய சுறா - பதறவைக்கும் காட்சி: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News