வயிற்றை கலக்கும் வீடியோ! இங்க வாக்கிங் போனா ஒரே நாள்ல 10 கிலோ எடை குறைக்கலாம்

Shocking Walking Video: இயற்கையின் அழகுடன் ஆபத்தும் நிறைந்திருக்கும் வீடியோக்களும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுக்கும். அப்படிப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிறது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 23, 2023, 09:50 PM IST
  • அதிர்ச்சி தரும் நடைபாதை
  • நூற்றாண்டுகள் கடந்த விநோதமான பாதை
  • மலைப்பாதையின் நெளிவு சுளிவுகள் வைரல் வீடியோ
வயிற்றை கலக்கும் வீடியோ! இங்க வாக்கிங் போனா ஒரே நாள்ல 10 கிலோ எடை குறைக்கலாம் title=

செங்குத்தான மலைப்பாதை வாக்கிங் வீடியோ வைரல்: பார்க்கும்போதே பதைபதைக்க வைக்கும் வீடியோக்களில் சில அதிசயமானதாக இருக்கும். அது சண்டை வீடியோவாகவே பெருமாலும் இருக்கும். ஆனால், இயற்கையின் அழகுடன் ஆபத்தும் நிறைந்திருக்கும் வீடியோக்கள் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுக்கும். அப்படிப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிறது. ஆபத்து நிறைந்த இந்த இடத்தில் எப்படி மக்கள் நடமாடுகிறார்கள் என்பதே அதிர்ச்சியாக இருக்கிறது.

தற்போது இணையத்தில் வைரலாகும் இந்த வாக்கிங் வீடியோவில் நடந்து செல்வதைப் பற்றி யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாது என்று தோன்றுகிறது. நீங்கள் இந்த வீடியோவைப் பார்த்த பிறகு இந்த இடம் எங்கே இருக்கிறது என்ற கேள்வியை கேட்காமல் இருக்க முடியாது.

வீடியோ வைரல்...

சமூக ஊடக தளமான X வலைதளத்தில் @historyinmemes என்ற எக்ஸ் கணக்கில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த பாதையில் நடந்து போவது என்பது சாதாரணமான விஷயம் இல்லை என்பது வீடியோவைப் பார்த்தாலே புரியும்.

சுமார் 80 டிகிடி செங்குத்தான மலைப்பாதையில் நடப்பதே நினைத்து பார்க்க முடியாது என்று நாம் மலைத்துப் போனால், அதில் சிலர் நடந்து போவது சாகசம் என்றே தோன்றுகிறது.

மேலும் படிக்க | டான்ஸ் அழகா இல்லை மேக்கப் அழகா? இவ்வளவு நேர்த்தியா நடனம் ஆட முடியுமா? வீடியோ வைரல்

80 டிகிரி செங்குத்து மலைப்பாதை

இந்த வீடியோவுக்கு பலரும் பல்வேறுவிதமான கருத்துக்களை பகிர்ந்திருந்தாலும்,  இந்த மலைப்பாதையின் பின்னணியை தெரிந்தால் அது மேலும் ஆச்சரியத்தை அளிக்கிறது. இது திரிம்பகேஷ்வர் மலைத்தொடரில் அமைந்துள்ள 80 டிகிரி செங்குத்தாக சாய்ந்த கோணத்தில் கட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் அமைந்துள்ள ஹரிஹர் கோட்டை, 80 டிகிரி செங்குத்து பாறை படிக்கட்டுகளுக்கு பெயர் பெற்ற மலையேற்றப் பாதையாகும். ஹரிஹர் கோட்டை  அல்லது ஹர்ஷகட் என்ற இந்தக் கோட்டை, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரத்திலிருந்து 40 கிமீ தொலைவிலும் , இகத்புரியிலிருந்து 48 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. விசித்திரமான பாறை வெட்டு படிகள் காரணமாக இந்த பாதை பிரபலமானது.

மேலும் படிக்க | மலைப்பாம்பின் மிருகத்தனமான போர்! யுத்தத்தில் ஜெயித்த கொமோடோ டிராகன்? வைரல் வீடியோ

9 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இந்தக் கோட்டைக் கட்டப்பட்டது. யாதவ வம்சத்தின் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோட்டையை அமைப்பது மிகவும் சவாலான ஒன்றாக இருந்தது என்பதை சரித்திரம் பதிவு செய்துள்ளது.

கோண்டா காட் வழியாக செல்லும் வர்த்தக பாதைகளை தடுப்பதில் பெரும் முக்கியத்துவம் பெற்ற மலைத்தொடர் இது. ஹரிஹர் கோட்டையை பிரிட்டிஷ் ராணுவம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு முன்பு பல படையெடுப்பாளர்களால் பலமுறை தாக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை.)

மேலும் படிக்க | மாத்தி யோசி! அதுக்குன்னு இப்படியா? ஓட்டுநரை கலாய்க்கும் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News