இணையதளத்தில் வைரலாகும் எம்.எஸ். தோனி மற்றும் மனைவி சாக்சி நடன வீடியோ

இணையதளத்தில் வைரலாகும் முன்னால் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி ஆடும் நடன வீடியோ.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 24, 2018, 03:25 PM IST
இணையதளத்தில் வைரலாகும் எம்.எஸ். தோனி மற்றும் மனைவி சாக்சி நடன வீடியோ title=

இணையதளத்தில் வைரலாகும் முன்னால் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி ஆடும் நடன வீடியோ.

இங்கிலாந்ததுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இழந்தது மூலம் அனைவரின் கவனம் இந்தியாவின் விக்கெட் கீப்பர் மற்றும் முன்னால் கேப்டன் மகேந்திர சிங் தோனி மீது திரும்பி உள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதிய ஒருநாள் தொடரில் மகேந்திர சிங் தோனி மெதுவாக ரன்கள் சேர்ந்தார்.. அதனால் இந்தியா தொடரை இழந்தது என்ற விமர்சனம் அவர் மீது வைக்கப்பட்டது. அனைத்து விமர்சனங்களுக்கும் அவர் தனது பேட்டிங் மூலம் பதில் அளிப்பார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது மகேந்திர சிங் தோனி தனது நண்பரான பூர்ணா படேல் திருமணம் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் என்சிபி தலைவர் பிரபுல் படேல் மகள் பூர்ணா படேல் ஆவார். இவர் தொழிலதிபர் நமி சோனியை திருமணம் செய்துக்கொள்கிறார். இந்த திருமண நிகழ்ச்சியில், தனது மனைவி மற்றும் மகள் ஜீவாவுடன் மகேந்திர சிங் தோனி கலந்து கொண்டார். இந்த திருமண நிகழ்ச்சியின் போது, ​​டோனி மற்றும் அவரது மனைவி சாக்சி நடனம் ஆடும் வீடியோ சமூக ஊடகத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. பல கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், பாடகர்கள் மற்றும் பிரபலங்கள் பூர்ணா பட்டேலின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

இதோ இந்த வீடியோ......

 

 

 

#poornabanisoni #sakshidhoni

A post shared by ZIVA SINGH DHONI (@zivasakshidhoni) on

 

 

 

Another dance video of Sakshi dii #sakshidhoni #poornabanisoni

A post shared by MS DHONI DIE HARD FANS CLUB (@mahi_kingdom) on

 

 

 

Trending News