மோடி எந்த ஒரு பயமும் இல்லாமல் என்னுடன் பயணம் செய்தார்: பியர் கிரில்ஸ்

பிரதமர் மோடியை காட்டுக்குள் அழைத்துச் சென்றது என்னுடைய பாக்கியம் என்று டிஸ்கவரி சேனல் Man Vs Wild நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸ்!! 

Updated: Aug 10, 2019, 12:27 PM IST
மோடி எந்த ஒரு பயமும் இல்லாமல் என்னுடன் பயணம் செய்தார்: பியர் கிரில்ஸ்

பிரதமர் மோடியை காட்டுக்குள் அழைத்துச் சென்றது என்னுடைய பாக்கியம் என்று டிஸ்கவரி சேனல் Man Vs Wild நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸ்!! 

டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிரபல நிகழ்ச்சியான Man Vs Wild நிகழ்ச்சி, உலகம் முழுவதும் அனைவரது கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ், அபாயகரமான உயிரினங்களை உயிரோடு உண்ணுவதில் திறமையானவர்.

யாரும் செல்லா காட்டுக்குள் சென்று பயணம் செய்வும், அருவியில் குதிப்பதுமாய் பார்பவர்களை வியப்பின் உச்சிக்கு கொண்டு செல்பவர். அந்நிகழ்ச்சியில் வரும் பியர் கிரைல்ஸ் உடன் மோடி காட்டுக்குள் பயணம் செய்யும் அந்த நிகழ்ச்சி வருகிற ஆகஸ்ட் 12 -ஆம் தேதி, இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

பிரதமர் மோடியுடனான அனுபவம் குறித்து பியர் கிரைல்ஸ் ANI செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்; "வனவிலங்குகள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலே ஒபாமா மற்றும் மோடியுடன் பயணம் செய்துள்ளேன்.  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கார்பெட் தேசியப்பூங்காவில் காட்டுக்குள் சென்றோம். இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி மிகவும் அமைதியாக இருந்தார். தைரியமாகவும் இருந்தார். அவரை அழைத்துச் சென்றது என்னுடைய பாக்கியம்.

காட்டுக்குள் பயணம் செய்யும் பொதுவாக அரசியல்வாதிகள் மிகவும் யோசிப்பர். ஆனால், பிரதமர் மோடி எந்த ஒரு பயமும் இல்லாமல் என்னுடன் பயணம் செய்தார். அவருடைய உடையில் அவர் மிகவும் அழகாக தெரிந்தார். பயணம் சற்று கடினமாகவே இருந்தது. பெரிய கற்கள், கரடு முரடான பாதைகளை கடந்து செல்ல வேண்டியிருந்தது. உலகத் தலைவர் ஒருவருடனான பயணம் மிகவும் எனக்கு பிடித்திருந்தது. பிரதமர் என்பதை மறந்து அவர் மிகவும் சாதரணமாக பயணித்தார். எப்போதுமே அவரது முகத்தில் புன்னகை இருந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.