புற்றுநோய் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை நிவாரணநிதியாக வழங்கிய நடிகை..

மலையாள சீரியல் மற்றும் திரைப்பட நடிகையான சரண்யா புற்றுநோய் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை கேரள வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்!

Updated: Aug 19, 2019, 01:13 PM IST
புற்றுநோய் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை நிவாரணநிதியாக வழங்கிய நடிகை..

மலையாள சீரியல் மற்றும் திரைப்பட நடிகையான சரண்யா புற்றுநோய் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை கேரள வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்!

கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் கேரளாவின் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ முதல்வர் நிவாரண நிதிக்கு பலர் தங்களால் முடிந்த நிதியை அளித்து வருகின்றர்.

இந்நிலையில் மலையாள சீரியல் மற்றும் திரைப்பட நடிகையான சரண்யா தனது புற்றுநோய் சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தில் ஒரு பங்கை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

நடிகை சரண்யா புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் தனது அறுவை சிகிச்சைக்காக குறிப்பிட்ட தொகையை சேர்த்து வைத்திருந்தார். இந்நிலையில் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பிற்கு தன்னால் முடிந்த உதவியாக சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை நிதியாக அளித்துள்ளார்.

இதனை அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகையின் இந்த செயலுக்கு பலரும் தங்களது பாராட்டினை தெரிவித்து வருகின்றனர். மலையாள சினிமா முன்னணி நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். பிரித்விராஜிற்கு கார்கள் மீது அலாதி பிரியம் உண்டு. இவர் ரூ.3 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் ஓக் காரை வாங்கினார்.

இந்த காருக்கு கே.எல். 07 சிஎஸ்7777 என்ற எண் கிடைக்க கொச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பதிவு செய்திருந்தார். இந்த எண்ணிற்கு மேலும் பலர் விண்ணப்பித்து இருந்தனர். ஒரே எண்ணிற்கு பலர் விண்ணப்பித்தால் எண் ஏலத்தில் விடப்படுவது வழக்கம். அதிக தொகை கேட்பவர்களுக்கு எண் ஒதுக்கப்படும். பிருத்விராஜ் திடீர் என்று ஏலத்தில் இருந்து விலகி கொள்வதாக ஆர்டிஓ அலுவலகத்தில் தெரிவித்துள்ளார்.

ஏலம் எடுக்கும் பணத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு கொடுக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவரையும் சமூகவலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.