வெளியானது மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் FirstLook!

ஜோக்கர் தமிழ் திரைப்படத்தின் மூலம் தனக்கென ஓர் முத்திரையை படைத்தவர் இயக்குனர் ராஜு முருகன். இவர் தற்போது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கான அடுத்த படத்திற்கு திரைகதை எழுதவுள்ளார்.

Last Updated : Jun 23, 2018, 07:41 PM IST
வெளியானது மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் FirstLook! title=

ஜோக்கர் தமிழ் திரைப்படத்தின் மூலம் தனக்கென ஓர் முத்திரையை படைத்தவர் இயக்குனர் ராஜு முருகன். இவர் தற்போது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கான அடுத்த படத்திற்கு திரைகதை எழுதவுள்ளார்.

தற்போது நடிகர் ஜீவா மற்றும் நடாஷா நடிப்பில் ஜிப்ஸி என்னும் படத்தினை இயக்கி வருகின்றார் இயக்குனர் ராஜூ முருகன். இத்திரைப்படத்தின் வேலைகள் நடைப்பெற்று வரும் வேலையில் தற்போது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் படத்தில் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிதாக தயாராகவுள்ள திரைப்படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரினை ஸ்டுடியோ கிரீன் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மெஹந்தி சர்க்கஸ் என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் மதம்பட்டி ரங்கராஜ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார். இது இவரது முதல் படம் என்பது குறிபிடத்தக்கது. 

இயக்குனர் ராஜு முருகன் கதை எழுத, இயக்குனர் சரவண ராஜேந்திரன் இப்படத்தினை இயக்குகிறார். சீன் ரோல்டன் இசையமைக்கின்றார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!

Trending News