துபாய்: இந்த சம்பவம் மொராக்கோவில் நடந்துள்ளது. பணியில் இருந்த ஒரு செவிலியர் தனது தந்தையின் அறைக்குள் நுழைய மறுப்பு தெரிவித்ததால், கோவிட் -19 நோயாளியின் மகனால் கொடூரமாக தாக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தின் வீடியோ கிளிப் வைரலாகி வருகிறது. அந்த இளைஞன் தக்லா நகரில் உள்ள ஹாசன் மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியரை ஓங்கி உதைக்கும் காட்சி வீடியோவில் பதிவாகி உள்ளது.
ALSO READ | செம தூக்கல்.. சுஹானா கான் படங்கள் சமூக வலைதளங்களில் வைரல்
ஆதாரங்களின்படி, அந்த நபரின் தந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதால் COVID-19 வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். தனது தந்தையை பார்க்குமாறு செவிலியரிடம் அந்த நபர் கோரியுள்ளார். ஆனால் மருத்துவமனையின் விதிகளின் படி, அந்த நாப்ரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தனது தந்தையை பார்க்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த இளைஞன் செவிலியரை கொடூரமாக தாக்கி, அவளது உடல் முழுவதும் காயங்களை ஏற்படுத்தினார். அவரது முடியை பிடுத்து கீழே தள்ளி, ஓங்கி உதைக்கிறார். இந்த காட்சியை பார்த்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் மற்றும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த நபர் கைது செய்யப்பட்டாரா என்பது இன்னும் தெரியவில்லை.
கடந்த இரண்டு மாதங்களில் மொராக்கோவில் சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான உடல்ரீதியான தாக்குதல் இது இரண்டாவது வழக்கு ஆகும். முன்னதாக ஆகஸ்ட் மாதம், ISPITS இல் ஒரு செவிலியர் மற்றும் ஒரு மாணவி கடுமையாகத் தாக்கப்பட்டனர்.
ALSO READ | Viral Dance: சமூக ஊடகங்களில் புயலைக்கிளப்பிய பிஹு டான்ஸ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR