பிளேபாய் பூனையை விடாமல் துரத்தி அலறவிட்ட நாய்க்குட்டிகள்!

பூனை ஒன்றை பல நாய்க்குட்டிகள் சூழ்ந்துகொண்டு விடாமல் துரத்தி பூனையை அலறவைத்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : May 7, 2022, 11:26 AM IST
  • பூனையை சுற்றி வளைத்த நாய் குட்டிகள்.
  • தப்பித்து ஓடும் பூனை.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
பிளேபாய் பூனையை விடாமல் துரத்தி அலறவிட்ட நாய்க்குட்டிகள்! title=

பிளேபாய்ஸ்களை சுற்றி எப்போதும் பெண்கள் கூட்டம் நிரம்பி வழியும், இதுபோன்ற சம்பவத்தை நாம் மனிதர்களிடம் தான் பார்த்திருப்போம்.  ஆனால் இங்கு பூனை ஒன்றை நாய்க்குட்டிகள் சூழ்ந்துகொள்கிறது, அந்த நாய்குட்டிகளிடம் இருந்து தப்பிக்க அந்த பூனைகுட்டி வேகமாக அங்குமிங்குமாக ஓடுகிறது.  இந்த நகைச்சுவையான காட்சிகள் இணையத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.  சமீபகாலமாக நாய்களும், பூனைகளும் ஒன்றுக்கொன்று நட்பு பாராட்ட தொடங்கிவிட்டது, நாய்க்கு பூனை மசாஜ் செய்வது மற்றும் பூனையும் நாயும் கண்ணாம்பூச்சி விளையாடுவது போன்ற பல அழகான சம்பவங்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றன.

மேலும் படிக்க | ஆட்டுக்கும் மயிலுக்கும் ‘சில்லுனு ஒரு சண்டை’, சிரிக்கும் நெட்டிசன்கள்: வைரல் வீடியோ 

ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த நகைச்சுவை வீடியோவில், சுவற்றின் ஓரத்தில் ஒரு பூனை ஒன்று நின்றுகொண்டு இருக்கின்றது, அதற்கு நேரெதிரே ஒரு கூண்டிற்குள் நாய்க்குட்டிகள் அடைக்கப்பட்டு இருக்கிறது.  அந்த கூண்டை திறந்துவிட்டதும், அதிலுள்ள நாய்க்குட்டிகள் கட்டுக்கடங்காத காளைகள் போல பாய்ந்து சீறிக்கொண்டு வெளியே தாவி குவித்து பூனையை நோக்கி ஓடுகின்றன.  

 

கிட்டத்தட்ட ஒன்பது நாய்க்குட்டிகள் ஒன்றாக சேர்ந்து அந்த பூனையை சூழ்ந்து கொள்கின்றன, பின்னர் ஒருவழியாக அந்த கும்பலில் இருந்து வெளியேறிய பூனைக்குட்டி வேகமாக ஓடி அங்கிருந்த ஒரு கதவின் மீது தாவி குதித்து தப்பித்து விடுவதுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.  இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கான இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர்.  இந்த வீடியோவிற்கு முப்பத்தி ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளது, மேலும் பல இணையவாசிகள் இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | போரை நிறுத்துங்கள் மழலையின் கெஞ்சல்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News