Watch Video: இளைஞரை பந்தாடிய யானை; மனம் பதற வைக்கும் வீடியோ!

மனிதர்கள் தங்களுக்கு தீங்கு விளைவிப்பார்கள், தாக்குவார்கள் என்று கருதும் போது தான், வன விலங்குகள் மனிதர்களை தாக்குகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 21, 2021, 11:51 AM IST
Watch Video: இளைஞரை பந்தாடிய யானை; மனம் பதற வைக்கும் வீடியோ! title=

பொதுவாகவே வன விலங்குகள், மனிதர்களை தாக்குவதற்கான காரணம் தங்களை தற்காத்துக் கொள்ளத்தான். ஏனென்றால் மனிதர்கள் தங்களுக்கு தீங்கு விளைவிப்பார்கள், தாக்குவார்கள் என்று அவை கருதும் போது தான், மனிதர்களை தாக்குகிறது . எனவே பொதுவாகவே  விலங்குகளை சீண்டாமல் இருந்தாலே, அவை தன் வேலையை பார்த்துக் கொண்டே சென்று விடும். அதுவும்  வன விலங்குகளில், உருவத்தில் மிகவும் பிரம்மாண்டமாகவும், மிகவும் வலிமைபடைத்ததாகவும் உள்ள யானை ஒருவரை தாக்கினால் என்ன வாகும் என நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது இல்லையா..!!

அந்த வகையில் யானை ஒரு இளைஞரை பந்தாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  இது அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த சம்பவம் ஆகும். அஸ்ஸாம் மாநிலம்  துப்ரி (Dhubri) மாவட்டம் தமர்ஹட் (Tamarhat) என்ற பகுதியில் உள்ள கிராமத்தில் காட்டு யானை ஒன்று 30 வயதான இளைஞரை துரத்திச் சென்றது. வேகமாக ஓடிய வாலிபர் நிலை தடுமாறி  கீழே விழுந்த நிலையில், தனது தும்பிக்கையால் அவரை பந்தாடியது. 

ALSO READ | Viral: தவித்த ஆமை.. காப்பாற்றிய காட்டெருமை! வைரல் வீடியோ

வீடியோவை இங்கே காணலாம்:

இந்த தாக்குதலில் அந்த இளைஞர் பலத்த காயமடைந்ததை அடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் வனத்துறை அதிகாரிகள், அந்த யானையை காட்டுப் பகுதியை நோக்கி துரத்தி விட்டதாக கூறப்படுகிறது.

யானை துரத்தியதன் காரணம் இன்னும் தெரியவில்லை. யானையை சீண்டும் வகையில் இளைஞர் ஏதேனும் செய்தாரா, யானை இவ்வளவு கோபமாக நடந்து கொண்ட காரணம் என்ன என்பது தெரியவில்லை.  

ALSO READ | Viral Video: பயங்கர தீயிலிருந்து தப்பி ‘வல்லவன் வாழ்வான்’ என நிரூபித்த ‘வீர’ சிறுவர்கள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News