வெறும் மரக்கட்டையா இல்ல பாம்பா? நெட்டிசன்களை குழப்பும் வைரல் வீடியோ

Snake Viral Video: நீங்கள் பார்க்கும் இந்த வீடியோவில் ஒரு பழுப்பு நிறத்தில் மரக்கட்டை போல் இருக்கும் பாம்பு இடம்பெறுள்ளது. அப்படிப்பட்ட ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 8, 2023, 02:29 PM IST
  • பழுப்பு நிற 10 அடி நீள பாம்பு.
  • அழகிய வைரல் வீடியோ.
  • காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோ.
வெறும் மரக்கட்டையா இல்ல பாம்பா? நெட்டிசன்களை குழப்பும் வைரல் வீடியோ title=

பாம்பின் வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

பாம்பு மிகவும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாகும். சில பாம்புகள் கடித்தால், உடனடி மரணம் கூட ஏற்படுவதுண்டு. பாம்பை பார்த்தாலே அனைவரும் அங்கிருந்து ஓடிவிடத்தான் எண்ணுவார்கள். சமீப காலங்களில் சமூக ஊடகங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. ஆனால், தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டது. அதன்படி இங்கு வெளியாகியுள்ள வீடியோவில் ஒரு அழகான மரக்கட்டை நாகம் இடம் பெற்றுள்ளது. 

மேலும் படிக்க | வீழ்வேன் என்று நினைத்தாயோ..பாம்பின் பதற வைக்கும் வைரல் வீடியோ

இந்நிலையில், இங்கு வைரலாகி வரும் வீடியோவில் பாம்பு ஒன்று பழுப்பு நிறத்தில் மரக்கட்டை போல் இருப்பதை நாம் காணலாம். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட சிறிது நேரத்தில் அதிக பார்வைகளையும் விருப்பங்களையும் பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோவை பார்த்த அனைவரும் வியந்து போயுள்ளனர்.

வீடியோவை இங்கே காணுங்கள்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த வீடியோ @snake._.world என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.

மேலும் படிக்க | Dolphin Viral Video: வானவில்லைத் தொடும் டால்பினின் ஹை ஜம்பிங் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News