Tiger the Guest: விருந்துக்கு வந்த புலி! என்ன சாப்பிட்டிருக்கும்? வீடியோ வைரல்

புலி, விருந்து ஒன்றில் கலந்துக் கொண்டதைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஆமாங்க... விருந்தில் புளி குழம்பு இல்லை... ஆனால் புலி இருந்தது... சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ..    

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 12, 2021, 05:00 PM IST
  • விருந்தில் கலந்துக் கொண்ட புலி
  • துபாயின் பூர்ஜ் அல்-அரபு ஹோட்டலுக்கு அருகில் நடைபெற்றது விருந்து
  • சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ
Tiger the Guest: விருந்துக்கு வந்த புலி! என்ன சாப்பிட்டிருக்கும்? வீடியோ வைரல் title=

துபாயில் வசிக்கும் ஒரு தம்பதி கொடுத்த விருந்தில் புலியும் கலந்துக் கொண்டது. அநத விருந்து வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

விருந்தில் கலந்துக் கொண்ட புலி, புளி குழம்பு சாப்பிட்டதா? என்று கேட்கத் தோன்றினால் அது உங்கள் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவதாக இருக்கலாம். ஆனால், நீங்களும் அந்த விருந்தில் கலந்துக் கொண்டிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?

துபாயில் வசிக்கும் ஒரு ஜோடி, பிறக்கப்போகும் தங்கள் குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்துவதற்காக விருந்து ஒன்றை கொடுத்தனர். இது வனவிலங்கு பிரியர்கள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களை கோபப்படுத்தியது.

Read Also | முட்டையை உடைத்துக்கொண்டு வெளிவரும் குட்டி பாம்புகள்

வைரலான வீடியோவில், புலி துபாயில் உள்ள பூர்ஜ் அல்-அரபு ஹோட்டலுக்கு அருகில் உள்ள கடற்கரையில் புலி, எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் சுற்றுகிறது. வீடியோவில் கடற்கரையில் உலா வரும் புலி, மணலில் புலி நடை போடுகிறது. மிதக்கும் பலூனின் அருகில் சென்று, கால்களை உயர்த்தி அதை உடைக்கும்போது அதிலிருந்து வண்ணப்பொடி கொட்டுகிறது.

பலூனில் இருந்து வெளிவந்த இளஞ்சிவப்பு பொடி, தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறக்கப் போகிறது என்பதை குறிக்கிறது.

வீடியோவை இங்கே பார்க்கவும்:

"புலிக்கு தீங்கு விளைவிக்கவில்லை, அங்கு கீழே விழுந்த பிளாஸ்டிக்கையும் அகற்றிவிட்டோம், கவலை வேண்டாம்" என்று வீடியோவுடன் எழுதப்பட்டிருந்தது. பகிரப்பட்ட இந்த புலி வீடியோவை கார்லோட்டா காவல்லரி என்பவர் இரண்டு நாட்களில் பகிர்ந்து கொண்டார். 'லோவின் துபாய்' ('Lovin Dubai') இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட பிறகு தான் இந்த வீடியோ வைரலானது.

தம்பதியரின் இந்த நடவடிக்கையை பலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருவதால், இந்த வீடியோவை மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

"முற்றிலும் தவறான விஷயம். கம்பீரமான உயிரினங்களை, உங்கள் சுய விருப்பத்திற்காக பயன்படுத்த வேண்டாம்!" என்று ஒருவர் கண்டிக்கிறார். மற்றொருவர், "புலியின் இடம் வனப்பகுதியில்... அது துபாயிலோ அல்லது வேறு எங்கும் செல்லப்பிராணியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று சீறுகிறார்.

வீடியோ "அபத்தமானது" என்று பலர் சொன்னாலும், "இது பெருமைக்குரிய விஷயம் அல்ல. இந்த விலங்குகள் செல்லப்பிராணிகள் அல்ல" என்ற கருத்தே பெரிதும் வலியுறுத்தப்படுகிறது.

ALSO READ | அணில் மற்றும் பாம்பு நேருக்கு நேர்; நடந்தது என்ன- வைரல் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News