புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஏப்ரல் 9 முதல் பணக்கார யோகம் ஆரம்பம்

Budhan Peyarchi Palangal: புதனின் ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும். எனினும், இந்த மாற்றத்தால் சில ராசிகளுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 5, 2024, 01:53 PM IST
  • கடக ராசிக்காரர்கள் புதனின் பெயர்ச்சியால் சாதகமான பலன்களைக் காண்பார்கள்.
  • இந்த காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
  • பணி இடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.
புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஏப்ரல் 9 முதல் பணக்கார யோகம் ஆரம்பம் title=

Budhan Peyarchi Palangal: கிரக பெயர்ச்சிகளுக்கு ஜோதிட சாஸ்திரத்தில் அதிக முக்கியத்துவம் உள்ளது. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. அனைத்து கிரகங்களுக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் உள்ளது. கிரக பெயர்ச்சிகளின் போது அந்தந்த கிரகங்களின் அம்சங்களில் தாக்கம் ஏற்படும்.

புதன்  புத்திசாலித்தனம், அறிவாற்றல், பேச்சாற்றல், நட்பு, அழகு ஆகியவற்றின் காரணி கிரகமாக கருதப்படுகிறார். இவர் கன்னி ராசியில் உச்சம் பெற்றுள்ள அதே நேரம் மீன ராசியில் நீச்சத்தில் உள்ளார். புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதி கிரகமாக உள்ளார். ஒருவரது ஜாதகத்தில் புதன் கிரகம் வலுவாக இருந்தால், அந்த நபர் வாழ்க்கையில் பல வித வெற்றிகளை பெறுகிறார். அதே சமயம் ஒருவரது ஜாதகத்தில் புதன் வலுவிழந்து இருந்தால் அந்த நபர் தொழிலில் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டி வரும். 

சைத்ர நவராத்திரி என அழைக்கப்படும் வசந்த நவராத்திரி ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி தொடங்கவுள்ளது. வட மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படும் சைத்ர நவராத்திரியின் முதல் நாளில் புதன் தனது ராசியை மாற்றுவார். புதனின் ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும். எனினும், இந்த மாற்றத்தால் சில ராசிகளுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அந்த ராசிகளை (Zodiac Signs) பற்றி இங்கே காணலாம்.

கிரகங்களின் இளவரசன் என அழைக்கப்படும் புதன், ஏப்ரல் 9ம் தேதி இரவு 9:41 மணிக்கு மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்து மீன ராசியில் நுழைவார். இந்த ராசியில் அவர் மொத்தம் 31 நாட்கள் இருப்பார். அதன் பிறகு மீன ராசியிலிருந்து அவர் மீண்டும் மேஷ ராசிக்கு செல்வார். 

ரிஷபம் (Taurus)

புதனின் வக்ர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் அதிக பலன்களைப் பெறப் போகிறார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன. உங்களது எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இதன் காரணமாக பொருளாதார நிலை வலுவடையும்.

மேலும் படிக்க | மீனத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்... அனைத்திலும் வெற்றி

மிதுனம் (Gemini)

மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியால் சுப பலன்கள் கிடைக்கும். மிதுன ராசிக்கு அதிபதி புதன். மிதுன ராசிக்காரர்களுக்கு பணி இடத்திலும் வியாபாரத்திலும் அனுகூலமான சூழல் உருவாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகமாகும். 

கடகம் (Cancer)

கடக ராசிக்காரர்கள் புதனின் பெயர்ச்சியால் சாதகமான பலன்களைக் காண்பார்கள். இந்த காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பணி இடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். 

கன்னி (Virgo)

கன்னி ராசியில் புதன் உச்சம் பெற்றிருக்கிறார். புதனின் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். உங்களை நோக்கி அனைவரும் ஈர்க்கப்படுவரகள். உத்தியோகத்தில் பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு விரும்பிய இடத்தில் உயர்கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நாளை சனி நட்சத்திர பெயர்ச்சி: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான், உங்க ராசி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News