1 வருடம் கழித்து சனியின் வீட்டில் சுக்கிரன்.. இந்த ராசிகளுக்கு அபரிமிதமான பணம், ராஜ வாழ்க்கை

Shukra planet transit venus planet gochar: சுக்கிரன் கும்ப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார், இதனால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். அந்த ராசிகளைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 4, 2024, 01:22 PM IST
  • அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.
  • ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும்.
  • அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும்.
1 வருடம் கழித்து சனியின் வீட்டில் சுக்கிரன்.. இந்த ராசிகளுக்கு அபரிமிதமான பணம், ராஜ வாழ்க்கை title=

Venus Transit Sukran Peyarchi : ஜோதிடத்தின் படி, சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. சுக்ரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். அந்த வகையில் ஆடம்பரத்திற்கும் அழகியலுக்கும் காரணகர்த்தாவான சுக்கிரன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாதம் ஒருமுறை இடம் பெயர்வார். அத்தகைய சூழ்நிலையில், வருகிற மார்ச் 7 ஆம் தேதி, சுக்கிரன் சனியின் சொந்த வீடான கும்ப ராசியில் இடப் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த சுக்கிரனின் பெயர்ச்சியின் பலன் அனைத்து ராசிகளிலும் தென்படும். ஆனால் இந்த நேரத்தில் மூன்று சில ராசிக்காரர்களுக்கு மட்டும் அதிர்ஷ்டமாக இருக்கும். மேலும், இந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நிதி ஆதாயமும், பண வரவும் உண்டாகும். இப்போது இந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்...

துலாம் (Libra Zodiac Sign) :
சுக்கிரன் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு ,லாபகரமான பலன் கிடைக்கும். ஏனெனில் சுக்கிரன் உங்கள் ராசியின் அதிபதி ஆவார். மேலும், சுக்கிரன் துலாம் ராசியிலிருந்து ஐந்தாம் வீட்டைப் பார்வையிடப் போகிறார். இந்நிலையில் இந்த நேரத்தில் குழந்தைகள் செல்வம் பெருகும், மேலும் பிள்ளைகள் மூலம் நல்ல செய்தியைப் பெறலாம். அதே சமயம், திருமணம் கைகூடலாம். மாணவர்களுக்கு உயர் கல்வி படிக்க வெளிநாட்டில் வாய்ப்பு கிடைக்கும். தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும்.

மேலும் படிக்க | Maha Shivratri Puja: அபிஷேகம் எப்படி எத்தனை நேரம் செய்யலாம்? எந்த திருமஞ்சனத்தால் கடவுளின் மனம் குளிரும்?

விருச்சிகம் (Scorpio Zodiac Sign) :
சுக்கிரனின் ராசி மாற்றம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். ஏனெனில் சுக்கிரன் நான்காம் வீட்டில் ஆட்சி பெற்று குடியேறுவதால் ஆடம்பர செலவு ஏற்படும். எனவே, இந்த நேரத்தில் வாகனம் அல்லது சொத்து போன்றவற்றை வாங்கலாம். வசதிகள் கூடலாம். வேலையில் புதிய உயற்கு அல்லது சம்பள உயர்வை பெறலாம். குடும்பத்துடன் வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறும். புதிய வீடு கட்டுபவர்களுக்கு லோன் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும்.

மகரம் (Capricorn Zodiac Sign) :
சனியின் வீட்டில் சுக்கிரன் பெயர்ச்சி நடக்கப் போவதால், மகர ராசிக்காரர்களுக்கு மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். சுக்கிரன் உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தின் இரண்டாவது வீட்டில் பெயர்ச்சி அடையப் போவதால், நீங்கள் எதிர்பாராத பண வரவைப் பெறலாம். வருமானம் அதிகரிக்கலாம், வங்கி இருப்பும் அதிகரிக்கலாம். அதே நேரத்தில், தனிப்பட்ட வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே காதல் அதிகரிக்கும். தன ஸ்தான சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Vijaya Ekadashi: விஜய ஏகாதசி 2024... மகாவிஷ்ணுவின் அருளை பரிபூரணமாக பெற... செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News