ஜூலை மாதம் இந்த 3 ராசிகளை ஜொலிக்க வைப்பார் சூரிய பகவான்: லாபம் பெருகும்

Sun Transit July 2022: 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் செய்தி உள்ளது. ஜூலை மாதம் சூரியன் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறவுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 4, 2022, 05:36 PM IST
  • கடகத்தில் சூரியனின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும்.
  • வேலை தேடுபவர்களுக்கு நல்ல வருமானத்துடன் கூடிய வேலை கிடைக்கும்.
  • சில ரிஷப ராசிக்காரர்களுக்கு வேலையில் இடமாற்றம் ஏற்படலாம்.
ஜூலை மாதம் இந்த 3 ராசிகளை ஜொலிக்க வைப்பார் சூரிய பகவான்: லாபம் பெருகும் title=

சூர்ய ராசி பரிவர்த்தனை 2022 ஜூலை: சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறார். பஞ்சாங்க கணிப்புகளின் படி, சூரிய பகவான் 16 ஜூலை 2022 அன்று தனது ராசியை மாற்றுவார். 

சூரியன் மிதுன ராசியை விட்டு நீங்கி கடக ராசியில் நுழைவார். சூரியனின் ராசி மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினுக், இந்த மாற்றத்தால் சில ராசிகளுக்கு அதிக அளவிலான பலன்கள் கிடைக்கும். ஜூலை 16 ஆம் தேதி சூரியனின் ராசி மாற்றம் மூன்று ராசிகளின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். 

இந்த மாற்றத்தின் போது சூரிய பகவான் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பு அருள் செய்வார். சூரியபகவானின் அருளால் இந்த மாதம் மிகவும் அற்புதமாக இருக்கப்போகும் ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

சூரியனின் ராசி மாற்றத்தால் ஜூலை மாதம் ஜொலிக்கப்போகும் ராசிகள் இவைதான்:

மேஷம்:

கடகத்தில் சூரியனின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். இந்த நேரத்தில் கடக ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மேஷ ராசிக்கார்ரகளுக்கு இது லாபகரமான நெரமாக இருக்கும். 

குடும்பத்திலும் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் பொங்கும். அனுகூலமான செய்திகள் உங்களை வந்தடையும்.

மேலும் படிக்க | குரு பூர்ணிமா 2022: உருவாகிறது 4 ராஜயோகங்கள்; யாருக்கு என்ன பலன்

ரிஷபம்:

கடகத்தில் சூரியனின் சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வருமானத்துடன் கூடிய வேலை கிடைக்கும். சில ரிஷப ராசிக்காரர்களுக்கு வேலையில் இடமாற்றம் ஏற்படலாம். இந்த மாற்றத்தால் அனுகூலமாக பலன்களை பெறுவீர்கள். 

வணிகத்தில் ஈடுபட்டுள்ள ரிஷப ராசிக்காரர்களுக்கு இது லாபகரமான நேரமாக இருக்கும். செய்யும் தொழிலில் விருத்தி ஏற்படும். பல புதிய ஒப்பந்தங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். இது முதலீட்டிற்கு நல்ல நேரமாக இருக்கும். இந்த காலத்தில் செய்யும் முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தை ஈட்டித்தரும். 

மிதுனம்:

சூரியனின் ராசி மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் ஜூலை மாதத்தில் பெரிய லாபம் பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். செல்வம் சேரும் வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். இந்த நேரம் முதலீட்டுக்கு சாதகமாக இருக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவு வலுவாக இருக்கும். கணவன்  மனைவி, குழந்தைகள் மூலம் பல மகிழ்ச்சிகரமான செய்திகளை பெறுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுக்கிரன் அருளால் இன்னும் 10 நாட்களில் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், தொட்டது துலங்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News