புதன் இருக்க கவலை ஏன்... இனி வாழ்க்கையில் குறையொன்றும் இருக்காது..!!

Mercury Transit Effects: புதன் பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசிகளையும் பாதிக்கும் என்றாலும், குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களுக்கு சிம்ம ராசியில் புதன் சஞ்சரிப்பது மிகவும் அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 6, 2024, 03:45 PM IST
  • புதன் பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசிகளையும் பாதிக்கும்.
  • உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்தித்து வருபவர்களுக்கு, புதனின் பெயர்ச்சி நிவாரணத்தை கொடுக்கும்.
  • மனதிற்கு திருப்தியையும், நல்ல ஊதியத்தையும் கொடுக்கும் வேலையைப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
புதன் இருக்க கவலை ஏன்... இனி வாழ்க்கையில் குறையொன்றும் இருக்காது..!! title=

Mercury Transit Effects: மிதுனம் மற்றும் கன்னி ராசிகளுக்கு அதிபதியான புதன் கிரகம், வரும் ஜூலை 19, 2024 அன்று இரவு 8:31 மணிக்கு சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளது . புதன் கிரகத்தின் ஆசி கிடைக்கும் நபரின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தடையே இருக்காது. புதனின் ஆதிக்கம் காரணமாக, வாழ்க்கையில் பெரும் வெற்றியை அளிக்கும் முடிவுகளை தைரியமாக எடுக்கும் ஆற்றல் ஒருவருக்கு ஏற்படுகிறது. 

புதன் பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசிகளையும் பாதிக்கும் என்றாலும், குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களுக்கு சிம்ம ராசியில் புதன் சஞ்சரிப்பது மிகவும் அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள். சிம்ம ராசியில் புதனின் சஞ்சாரம் எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும் என்பதை தெரிந்து கொள்வோம். 

மேஷ ராசிக்கான புதன் பெயர்ச்சி பலன்கள்

சிம்ம ராசியில் புதன் பெயர்ச்சி காரணமாக, மேஷ ராசியினர் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் நிம்மதியையும் பெறுவார்கள். உங்கள் தொழிலில், வேலையில் மனதிருப்தி கிடைக்கும். வியாபாரத்தில் உற்பத்தியும் லாபமும் பெருகும். முதலீடுகள் மூலம் நல்ல இலாபம் கிடைக்கும். பொருளாதார ரீதியாக வலுவான நிலையை அடைவீர்கள். வாழ்க்கை துணைவியுடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்தித்து வருபவர்களுக்கு, புதனின் பெயர்ச்சி நிவாரணத்தை கொடுக்கும். மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். 

மிதுன ராசிக்கான புதன் பெயர்ச்சி பலன்கள்

மிதுன ராசியினருக்கு புதன் பெயர்ச்சி காரணமாக தொழில், வியாபாரம், உறவுகள் மற்றும் ஆரோக்கியம் என அனைத்தும் சிறப்பாக இருக்கும். சிம்மத்தில் புதன் சஞ்சாரம் காரணமாக நிதி ரீதியாக வலுவாக இருப்பீர்கள். உங்கள் தொழிலில் முன்னேற்றம் அடைய புதிய வாய்ப்புகளைத் தரும். வேலை மாற்றம் அல்லது இடமாற்றம், வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான அடித்தளமாக இருக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கும், இந்த நேரம் சாதகமாக இருக்கும். புதிய வேலை மூலம் உங்கள் பொருளாதார நிலை மேலும் வலுவாகும். முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மேலும் படிக்க | சூரிய அஸ்தமனத்திற்கு பின்.. ‘இவற்றை’ தானம் செய்தால் லட்சுமி கடாட்சம் போய் விடும்..!!

சிம்மம் ராசிக்கான புதன் பெயர்ச்சி பலன்கள்

சிம்ம ராசிக்காரர்களுக்கு, புதனின் பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டு வரும். அதிக ஆற்றலுடனும் நம்பிக்கையுடனும் செயல்பட்டு அனைத்திலும் வெற்றிகளை குவிப்பீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். மனதிற்கு திருப்தியையும், நல்ல ஊதியத்தையும் கொடுக்கும் வேலையைப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. வணிகர்கள் பயணங்கள் மூலம் லாபம் அடைவார்கள். வருமானத்தை அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். நிதி ரீதியாக வலுவான நிலையில் இருப்பீர்கள். நல்ல முறையில் பணம் அதிகம் சம்பாதிப்பதோடு சேமிக்கவும் முடியும். காதல் உறவுகளில் இனிமை இருக்கும். 

தனுசு ராசிக்கான புதன் பெயர்ச்சி பலன்கள்

தனுசு ராசிகளுக்கு, புதனின் பெயர்ச்சி வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும். எடுக்கும் முயற்சிகளில் வாழ்க்கைத் துணையின் ஆதரவு முழுமையாக இருக்கும். வேலையில், தொழிலில் முன்னேற்றம் இருக்கும். சிம்மத்தில் புதன் சஞ்சரிப்பதால், உங்கள் மனைவி மற்றும் நண்பர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். புதிய உறவுகள் மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.  புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அது உங்களுக்கு மனநிறைவைத் தரும். நிதி ரீதியாக இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமானது. செல்வம் சேர்ப்பதில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஊக்கத்தொகை மற்றும் பிற சலுகைகள் உங்கள் வருமானத்தை அதிகரிக்கும்.

துலாம் ராசிக்கான புதன் பெயர்ச்சி பலன்கள்

புதன் பெயர்ச்சி காரணமாக துலாம் ராசிகளின் விருப்பங்கள் நிறைவேறும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் வெற்றி பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிம்ம ராசியில் புதன் சஞ்சரிப்பது உங்கள் ஆசைகளை நிறைவேற்றுவதிலும் பெரிய முடிவுகளை எடுப்பதிலும் வெற்றியைத் தரும். இந்த காலகட்டத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிதி ரீதியாக வலுவாக இருப்பீர்கள். நீங்கள் பணத்தை சேமிக்க முடியும். உத்தியோகத்தில் சாதகமான நிலை ஏற்படும். உங்கள் திறமை பாராட்டப்படும். வியாபாரத்தில் லாபம் பெருகும். திட்டங்கள் வெற்றியடையும். வாழ்க்கைத் துணையுடன் இனிமையாகப் பொழுதைக் கழிப்பீர்கள். உங்கள் காதல் உறவு வலுவடையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | 12 ஆண்டுகளுக்கு பின் இணையும் குரு - செவ்வாய்... இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News