அக்டோபர் 28 ராசிபலன்: 4 ராசிகளுக்கு அமோகமான நாள், சனீஸ்வரரின் அருள் உண்டு

Daily Rasipalan 2023 October 28: இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எப்படி உள்ளது? அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலனை தெரிந்துக் கொள்வோம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 28, 2023, 06:10 AM IST
  • நவம்பர் மாத கடைசி வார சனிக்கிழமை ராசிபலன்
  • குடும்பத்தில் நிம்மதியா சூழல் நிலவும்
  • சனீஸ்வரரின் அருள் பெறும் கன்னி ராசி
அக்டோபர் 28 ராசிபலன்: 4 ராசிகளுக்கு அமோகமான நாள், சனீஸ்வரரின் அருள் உண்டு title=

அக்டோபர் 28, 2023 தினசரி ராசிபலன்: கிரக நிலைகளுக்கும், அவற்றின் பெயர்ச்சிகளுக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கிரக மாற்றங்கள் மற்றும் பிற ஜோதிட அம்சங்களின் அடிப்படையில் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கை அமைகிறது. இன்றைய தினம் அனைத்து ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துக் கொள்வோம். அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலனை தெரிந்துக் கொள்வோம்.

மேஷம்
நண்பர்களுக்கிடையே பேசும் போது நிதானம் வேண்டும். கோபமான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். பிறரின் பணிகளைக் குறை சொல்லாமல் இருப்பது நன்மை தரும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். குடும்ப விவகாரங்கள் பற்றி பகிர்வதைக் குறைத்துக் கொள்ளவும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதுமையான செயல்களில் ஆர்வம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

ரிஷபம் 
செய்யும் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். கை, கால்களில் ஒருவிதமான வலிகள் ஏற்பட்டு நீங்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதைத் தவிர்க்கவும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். லாபம் நிறைந்த நாள். 

மிதுனம் 
நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கித் தெளிவு பிறக்கும். பிள்ளைகளின் மூலம் பெருமைகள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை பிறக்கும். பொறுமை வேண்டிய நாள்.

கடகம்
எதிரிகள் விலகிச் செல்வார்கள். கடக ராசிக்காரர்களுக்கு எதிர் பாலினத்தவரின் ஆதரவு கிடைக்கும். தனவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வியாபாரத்தில் ஆதரவான சூழல் அமையும். பணிபுரியும் இடத்தில் ஒற்றுமை மேம்படும். முயற்சி ஈடேறும் நாள்.

மேலும் படிக்க | சனி, சுக்கிரன் மாற்றம்: தீபாவளிக்கு முன் இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்

சிம்மம்
வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளை செயல் வடிவில் மாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பேச்சு வன்மையால் அனுகூலம் ஏற்படும். விருப்பமான விஷயங்களைத் தைரியமாகச் செய்து முடிப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அணுகுமுறையில் சில மாற்றங்கள் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.

கன்னி
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பேச்சுக்களில் கனிவு வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதைத் தவிர்க்கவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நேரம் தவறி உணவு உண்பதைக் குறைத்துக் கொள்ளவும். எதிலும் பதற்றமின்றி பொறுமையுடன் செயல்படவும். செலவு நிறைந்த நாள்.

துலாம்
சிந்தனையில் இருந்துவந்த குழப்பம் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சக மாணவர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழகும் விதங்களில் மாற்றம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தைரியம் வேண்டிய நாள். 

விருச்சிகம்
நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் உழைப்பு அதிகரிக்கும். தாய் மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். குழந்தைகளின் வழியில் அனுகூலமான சூழல் அமையும். தடைபட்ட சில காரியங்கள் கைகூடி வரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். அச்சம் குறையும் நாள்.

மேலும் படிக்க | நவம்பரில் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுப்பார் சுக்கிரன்

தனுசு
பயனற்ற விவாதங்களைக் குறைத்துக் கொள்ளவும். திடீர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். தனவரவு தாராளமாக இருக்கும். வாகனங்களால் முன்னேற்றம் ஏற்படும். பெரியோர்களின் வழியில் உதவி கிடைக்கும். நிர்வாக துறைகளில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். மனதளவில் இருந்துவந்த தயக்கம் குறையும். கவனம் வேண்டிய நாள்.
 
மகரம் 
மகர ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் சாதகமான சூழல் ஏற்படும். பேச்சுத் திறமையால் லாபம் அதிகரிக்கும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதம் குறையும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கீர்த்தி நிறைந்த நாள். 

கும்பம்
எண்ணிய பணிகளை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். எழுத்து துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இசை சார்ந்த துறைகளில் அனுபவம் அதிகரிக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உள்ள வேற்றுமை நீங்கும். சிரமம் விலகும் நாள்.

மீனம்
விளையாட்டுகளில் கவனம் வேண்டும். வெளி உணவுகளைத் தவிர்க்கவும். பொன், பொருட்கள் மீதான முதலீடுகள் அதிகரிக்கும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். பத்திர விஷயங்களில் விவேகம் வேண்டும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

மேலும் படிக்க | தீபாவளிக்கு முன் 4 ராசிகளுக்கு பணமழை! கஜானாவை நிரப்ப சுக்கிரனும் சனியும் தயார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News