விஜயதசமிக்கு அடுத்தநாள் விருச்சிகத்திற்கு மாறும் சுக்கிரன் யாருக்கெல்லாம் விஜயத்தைத் தருவார்? சுக்கிரப் பெயர்ச்சி பலன்கள்

Venus Transit In Scorpio Just After Vijayadashami : விஜயதசமி முடிந்த அடுத்த நாளே, சுக்கிரன் விருச்சிக ராசிக்கு சஞ்சரிப்பது, பன்னிரெண்டு 12 ராசிகளிலும் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைத் தெரிந்துக் கொள்வோம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 10, 2024, 09:18 PM IST
  • விருச்சிகத்திற்கு மாறும் சுக்கிரன்
  • விஜயதசமிக்கு அடுத்த நாள் நடைபெறும் சுக்கிரன் பெயர்ச்சி!
  • சுக்கிரன் பெயர்ச்சியின் பலன்கள்
 விஜயதசமிக்கு அடுத்தநாள் விருச்சிகத்திற்கு மாறும் சுக்கிரன் யாருக்கெல்லாம் விஜயத்தைத் தருவார்? சுக்கிரப் பெயர்ச்சி பலன்கள் title=

Shukra Gochar October 13th 2024 : விருச்சிக ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் இன்னும் இரண்டே நாட்களில் நடைபெறவிருக்கிறது. ஆடம்பரமான வாழ்க்கையும், விரும்பும் பொருட்கள் அனைத்தையும் அனுபவிக்கும் யோகத்தையும் கொடுக்கும் சுக்கிரன் கிரகத்தின் விருச்சிக ராசி சஞ்சாரம் யாருக்கு எப்படி இருக்கும்? பன்னிரண்டு ராசிகளில் அதன் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

மேஷம்

குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம், உறவினர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்

உத்தியோகத்திலும், தொழிலும் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். சுக்கிரனின் ரிஷப ராசி பிரவேசத்தால், ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் பிரச்சினைகள் சற்று குறையும்.

மிதுனம்

சுக்கிரனின் ரிஷப ராசி பெயர்ச்சியால் மிதுன ராசியினருக்கு தனவரவு உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும்.  மேலதிகாரிகளால் அனுகூலப் பலன் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்

குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை சந்திக்க நேரிடலாம். ஆரோக்கிய பாதிப்புகளை அலட்சியப்படுத்த வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. புதிதாக எடுக்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும்.

மேலும் படிக்க | சரஸ்வதி பூஜையன்று இந்த மந்திரங்களை சொன்னால் போதும்: முட்டாளும் மேதையாகலாம்

சிம்மம்

பொருளாதார ரீதியில் சுக்கிரனின் இந்த பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும், தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கி லாபம் உண்டாகும். வெளியூர் பயணம் லாபம் கொடுக்கும்,  பணிச்சுமை குறையும்.

கன்னி

பணவரவு சுமாராக இருக்கும். செலவுகளை குறைத்துக் கொண்டால் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் கிடைக்கும் எதிர்பாராத உதவியால் நிம்மதி உண்டாகும்.

துலாம்

குடும்பத்தில் ஒற்றுமையுடன் இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும்.

விருச்சிகம்

தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பயணங்கள் புதிய வாய்ப்புகளை கொண்டுவந்துக் கொடுக்கும்.  பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் அனுகூலம் கிட்டும். வருமானம் இரட்டிப்பாகும் வாய்ப்பு ஏற்படும்.

மேலும் படிக்க | உங்க ராசி இதுவா? குருவின் வக்ரப் பெயர்ச்சியால் 118 நாட்களுக்கு ஹை அலர்ட் காலம்: உஷார் மக்களே!

தனுசு

செய்ய நினைக்கும் செயல்களில் காரியத்தடை மற்றும் இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சினைகள் குறையும்.

மகரம்

மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படுத்தும் சுக்கிரன் பெயர்ச்சியால் நிம்மதி குறையும்ம். சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். ஒரு மாதத்தில் நிலைமை சரியாகிவிடும்

கும்பம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழும் யோகம் உண்டு.

மீனம்

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமூகமாக இருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்கும் யோகம் உண்டாகும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | நவராத்திரியில் சக்தி வழிபாடு! 51 சக்திபீடங்களிலும் ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை தசரா கோலாகலம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News