சந்திர கிரகணத்தின்போது சந்திரன் பகுதி சிவப்பு நிறத்தில் தோன்றும். எனவே, இது பிளட் மூன் என்றும் அழைக்கப்படுகிறது. நாளை (நவ. 8) நிகழ இருக்கும் சந்திர கிரகணம் இந்தியாவின் கிழக்கு நகரங்களில் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணம் நிகழ்கின்றது.
அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரிய கிரகணம் என்றும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது.. முழு சூரிய கிரகணம் என்றும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் அது.. பகுதி சூரிய கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. அந்தவகையில், வரும் நவம்பர் 8ம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. மத நம்பிக்கைகளின்படி, கிரகணம் நிகழும் நேரம் சற்று அசுபமாக கருதப்படுகிறது.
அந்த வகையில் கிரகணம் நிகழும் வேளையில் பல்வேறு கோயில்களின் நடை அடைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்திர கிரகணம் நாளை மதியம் 2.39 மணியில் இருந்து மாலை 6.27 மணிவரை நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | யம்மாடி....இத்தனை கோடி சொத்து இருக்கா திருப்பதி கோவிலுக்கு
7 மணிநேரம் அடைப்பு
இந்நிலையில், திருப்பதியில் இருக்கும் கோயில் அனைத்தும் நாளை காலை 8.30 மணியில் இருந்து மாலை 7.30 வரை நடை சாத்தப்பட்டிருக்கும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அறிவித்துள்ளது. மேலும், சர்வதரிசனம் பிரிவில் பக்தர்கள் காலை 7.30 மணியில் இருந்து 8.30 வரை அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி கோயில்கள் நாளை ஏழு மணிநேரங்களுக்கு அடைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
TTD local Temples remain closed for 11 hours between 08.30 AM to 7.30 PM on November 8th in view of the Lunar Eclipse which occurred between 2.39 PM to 6.27 PM and reopened after the temple shuddi.
It was a tradition to close temples 6 Hrs ahead of the eclipse.
— Tirumala Tirupati Devasthanams (@TTDevasthanams) November 6, 2022
இதன்பின்பு, இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு, திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜா மற்றும் ஸ்ரீ கோதண்டராமர் கோயில்களிலும், திருச்சானூரில் உள்ள ஸ்ரீ பத்மாவதி அம்மாவாரி கோயிலிலும், ஸ்ரீநிவாச மங்காபுரத்தில் உள்ள ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரா கோயிலிலும் கிரகணத்திற்கு பின்னான சமய சடங்குகள் செய்யப்படும் எனவும் தெரிகிறது.
இரவு 8 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயிலில் அபிஷேகம், அலங்காரம், சஹஸ்ரநாம அர்ச்சனை மற்றும் ஏகாந்த சேவை ஆகிய சடங்குகள் பின்னர் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று சந்திர கிரகணத்தினால், தமிழ்நாட்டிலும், பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலின் அனைத்து சன்னிதானங்களும் பிறப்பகல் 2.30 மணிக்கு மேல் அடைக்கப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது. சந்திரகிரணகத்திற்கு நடை திறக்கப்பட்டு பிற பூஜைகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்; பண இழப்பை சந்திக்கும் ‘சில’ ராசிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ