சனியின் அருளால் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை, தலைவிதி மாறும்

Saturn Transit: சனிபகவானின் மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளுக்கு அதிகப்படியான பலன்கள் கிடைக்கும். சனிபகவான் மகர ராசியில் சஞ்சரிப்பது 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 6, 2022, 04:52 PM IST
  • இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்கச்செய்வார் சனி பகவான்.
  • மீன ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் இயக்கம் மிகவும் சாதகமாக இருக்கும்.
  • இந்த நேரத்தில் அவர்களுக்கு பல இடங்களிலிருந்து பண வரவு கிடைக்கும்.
சனியின் அருளால் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை, தலைவிதி மாறும் title=

சனி பகவானின் ராசி மாற்றம் 2022: ஜோதிட சாஸ்திரத்தில், சனி பகவானின் இயக்கத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சனி, வக்ர நிலையில், அதாவது பிற்போக்கு நிலையில், ஜூலை 13 ஆம் தேதி மகர ராசியில் நுழைந்தார். 2022 அக்டோபர் 23 ஆம் தேதி, சனி பகவான் இந்த ராசியில் மார்க்கியாவார், அதாவது இயல்பு இயக்கத்திற்கு மாறுவார். மேலும் அவர் 2023 ஜனவரி 17 ஆம் தேதி வரை இங்கேயே இருப்பார். பொதுவாக சனிபகவானின் ராசி மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளுக்கு அதிகப்படியான பலன்கள் கிடைக்கும். சனிபகவான் மகர ராசியில் சஞ்சரிப்பது 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். 

இந்த காலகட்டத்தில் சனிபகவான் இந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியச்செய்வார். இவர்களின் அதிர்ஷ்டமும் பிரகாசிக்கும். இதற்கிடையில், இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். சனியின் மாற்றங்களால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கப் போகின்றன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்கச்செய்வார் சனி பகவான்: 

மீனம்: 

மீன ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் இயக்கம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் அவர்களுக்கு பல இடங்களிலிருந்து பண வரவு கிடைக்கும். அவர்களின் வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து திடீர் பண வரவு இருக்கும். நல்ல வேலை வாய்ப்புகள் வரக்கூடும். உங்கள் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். எப்போதும் நேர்மறையாக இருங்கள். சனி பகவானின் அருளைப் பெற, கருப்பு எறும்புகளுக்கு மாவு மற்றும் சர்க்கரையுடன் உணவளிக்க வேண்டும்.

மேலும் படிக்க | மாத ராசிபலன்: கிரக மாற்றங்களால் இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி பொங்கும், லாபம் பெருகும் 

கும்பம்: 

கும்ப ராசிக்காரர்களுக்கு சனிபகவானை வழிபடுவதால் நல்ல பலன்கள் உண்டாகும். இவர்களுக்கு பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் இடமாற்றம் விரும்பியவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். இந்த இடமாற்றம் உங்களுக்கு சாதகமான விளைவுகளை அளிக்கும். 

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல நேரமாக இது இருக்கும். வேலைக்காக வெளிநாடு செல்ல நேரிடலாம். வெளிநாடு செல்லும் அவர்களின் கனவு நிறைவேறும். திடீர் பண வரவு ஏற்படலாம். இருப்பினும் இந்த நேரத்தில் கும்ப ராசிக்காரர்களின் செலவுகளும் அதிகரிக்கும். தேர்வு-நேர்காணலை எதிர்கொண்டு இருப்பவர்கள் வெற்றிகளை பெறுவார்கள். 

மகரம்: 

மகர ராசியில் சனி சஞ்சரிப்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு ஷஷ் என்ற பஞ்ச மகாபுருஷ யோகம் உண்டாகும். இவர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுவார்கள். தலைமைப் பண்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பண வரவு சாதகமாக இருக்கும்.

மேலும் படிக்க | வாழ்க்கையை சீர்குலைக்கும் ‘ராகு - கேது தோஷம்’; சில எளிய பரிகாரங்கள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News