குபேரனின் அருளால் அடுத்த நாலு மாசத்துக்கு அதிர்ஷ்டத்தை அறுவடை செய்யும் 4 ராசிகள்

Planet Transits in 2022: கிரகங்களின் பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. ஜோதிடத்தின் அடிப்படையில் 4 ராசிக்காரர்களுக்கு குபேரனின் கடைக்கண் பார்வை அடுத்த 4 மாதங்களுக்கு செல்வத்தை கொண்டுவந்து கொட்டும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 17, 2022, 09:05 PM IST
  • மீன ராசியினருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்
  • ரிஷப ராசிக்காரர்கள் புதனின் பெயர்ச்சியால் மகத்தான பலன்களை அடைவார்கள்
  • செலவுகள் அதிகரித்தாலும் பிரச்சனைகள் இருக்காது
குபேரனின் அருளால் அடுத்த நாலு மாசத்துக்கு அதிர்ஷ்டத்தை அறுவடை செய்யும் 4 ராசிகள் title=

புதுடெல்லி: கிரகங்களின் பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. ஜோதிடத்தின் அடிப்படையில் 4 ராசிக்காரர்களுக்கு குபேரனின் கடைக்கண் பார்வை அடுத்த 4 மாதங்களுக்கு செல்வத்தை கொண்டுவந்து கொட்டும். 2022 ஆம் ஆண்டின் அடுத்த 4 மாதங்களில், சில ராசிக்காரர்களின் தொழில் மற்றும் நிதி நிலைமைக்கு மிகவும் சாதகமான கிரக நிலைகள் இருக்கப் போகின்றன. இந்த காலகட்டத்தில், சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களின் நிலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என்பதால், இந்த 4 ராசிக்காரர்களுக்கு அடுத்த 4 மாதங்கள் சிறப்பானவை, பண மழை பெய்யும், நிறைய வெற்றி கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்காரர்களில் நீங்களும் ஒருவரா?

ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகத்தின் நகர்வு மற்றும் மாற்றத்தின் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோள்களின் சஞ்சாரமும், வக்ர நகர்வும் ராசிகள் அனைத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 2022 ஆம் ஆண்டில் மீதமுள்ள மூன்றரை மாதங்களில் முக்கியமான கிரகங்கள் பெயர்ச்சியாகின்றன.  சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன் தரும் இந்த காலகட்டம் பலருக்கு வாழ்க்கையில் மறக்க முடியாததாக இருக்கும்.  

மேலும் படிக்க | சூரியன் புதன் சேர்க்கையால் உருவாகும் புத ஆதித்ய யோகம்: இந்த ராசிகளுக்கு நல்ல நேரம் 
 
டிசம்பர் 2022 வரை 4 ராசிக்காரர்களுக்கு உகந்த நேரம்
மிதுனம்- மிதுன ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் முழுவதும் நன்றாக இருக்கும். அதன் பிறகு அக்டோபர், நவம்பர், டிசம்பர் வரை மிகவும் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். வருமானம் அதிகரிக்கும். எந்த ஒரு சோதனையும் சாதனையாக மாறி உங்கள் மனதை மகிழ்விக்கும்.

விருச்சிகம்- விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டின் மீதமுள்ள காலகட்டம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இவர்களுக்கு சூரியன் மற்றும் சுக்கிரனின் சஞ்சாரம் மிகவும் நல்ல பலன்களைத் தரும். பணம் சம்பாதிக்க புதிய வழிகள் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தி அதிக லாபம் ஈட்டுவார்கள். வெளிநாட்டில் இருந்து லாபம் உண்டாகும்.

மேலும் படிக்க | சூரியனின் ராசி மாற்றம்: இன்று முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், இன்ப ஒளி வீசும்

தனுசு ராசி - சுக்கிரன் மற்றும் சூரியனின் சஞ்சாரம், தனுசு ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். இந்த கிரகங்கள் அவர்களின் தொழிலில் பெரும் வெற்றியை தரும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பளம் உயரும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் வரும்.

மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு செவ்வாய், புதன் ராசி மாற்றம் பலன்களைத் தரும். இது தவிர, வக்ர கதியில் இயங்கும் குருவும் தன்னுடைய ராசியான மீனத்தில் சுபமாக இருப்பார். எனவே மீன ராசியினருக்கு வேலையில் அனுகூலமான காலம் இது என்று சொல்லலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய ஆதாயம் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வரும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுக்கிரனின் மாற்றத்தால் கண்களின் கண்ணீர் வரும்! சிலருக்கு ஆனந்தக் கண்ணீர்! ஆனால் பலருக்கு???

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News