புதாதித்ய யோகத்தால் தலைவிதியை மாற்றலாம்! உங்களை புத்திசாலியாக்கும் யோகம்...

Budhaditya Yogam 2024 : குடும்பத்தில் நிம்மதி கொடுக்கும் புதாதித்ய யோகம், உங்கள் மூளையை சுறுசுறுப்பாக செயல்பட செய்து அனைவரின் பாராட்டையும் வாங்கிக் கொடுக்கும்! இது எந்த ராசிக்காரருக்கான பலன்?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 12, 2024, 11:51 PM IST
  • குடும்பத்தில் நிம்மதி கொடுக்கும் புதாதித்ய யோகம்
  • மூளையை சுறுசுறுப்பாக செயல்பட செய்யும் புதன்
  • பாராட்டை வாங்கிக் கொடுக்கும் ஆதித்யன்!
புதாதித்ய யோகத்தால் தலைவிதியை மாற்றலாம்! உங்களை புத்திசாலியாக்கும் யோகம்... title=

Budhaditya Rajyog 2024 : நவக்கிரகங்களில், ஆத்மகாரகனான சூரியனுடன், புதன் சேர்வதால் புதாதித்ய யோகம் ஏற்படுகிறது. ஒருவரின் ஜனன ஜாதகத்தில் இந்த இரண்டு கிரகங்களும் இணைந்திருந்தால், புத - ஆதித்ய யோகம் இயல்பாகவே இருக்கும். கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொன்றுக்கு பெயரும்போது புதனும், சூரியனும் ஒரே வீட்டில் இருக்கும்போது ஏற்படும் புதாதித்ய யோக, அந்த கிரகங்களில் ஒன்று ராசிப் பெயர்ச்சி அடையும் போது மாறிவிடும்.

தற்போது புதன் பெயர்ச்சியாகி மிதுன ராசியில் இருக்கும்போது, ஜூன் மாதம் 14ம் தேதியன்று சூரியனும் அதே ராசிக்கு செல்வதால் புதாதித்ய யோகத்தின் நற்பலன்கள் சில ராசிகளுக்கு நல்ல அருமையான வாழ்க்கையைக் கொடுக்கும். சூரியன், புதன் ஆகிய இரு சுப கிரகங்களின் சேர்க்கையால் ஏற்படும் யோகம் மங்களகரமானது. இந்த யோகம் அனைவருக்கும் சாதகமானதாக இருக்காது என்றாலும், சில ராசிக்காரர்களுக்கு  லாபமானதாக இருக்கும். இதில் யாருக்கு புதாதித்ய யோகம் நன்றாக இருக்கும் என தெரிந்துக் கொள்வோம்

மிதுன ராசி

பணியிடத்தில் மரியாதையைக் கொடுக்கும் புதாதித்ய யோகம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும், ஊதிய உயர்வும் ஏற்படும் என்பதால் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி கொடுக்கும் புதாதித்ய யோகம், உங்கள் மூளையை சுறுசுறுப்பாக செயல்படச் செய்து அனைவரின் பாராட்டையும் வாங்கிக் கொடுக்கும்.  வருமானம் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | திரிகிரஹி தோஷத்தினால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அந்த ’நாலு’ ராசிக்காரர்கள் யார்?

துலாம்:  மிதுன ராசியில் புதன் மற்றும் சூரியன் இணைவதால் உருவாகும் புதாதித்ய யோகம், துலாம் ராசியினருக்கு மிகவும் நன்றாக இருக்கும். சூரியனின் செல்வாக்கு துலாம் ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் வெற்றியைத் தரும். புதனின் அருளால், அறிவார்ந்த பேச்சும், செயல்பாடுகளும் அனைவராலும் பாராட்டப்படும். கல்வி, ஊடகம், சந்தைப்படுத்தல் போன்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.

சிம்மம்
மங்கள யோகமான புதாதித்ய யோகம் இருக்கும் காலகட்டத்தில், சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்தும் பணம் வந்து சேரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த வேலைகள் நல்லபடியாக முடிவடையும்.  

மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதை!

மீனம்
புத்தாதித்ய ராஜயோகம் மீன ராசியினருக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு என வாழ்க்கையில் முன்னேறும் வாய்ப்புகளை புதாதித்ய யோகம் கொடுக்கும். சமூகத்தில் மரியாதையும் அந்தஸ்தும் அதிகரிக்கும், அரசியலில் ஈடுபட்டிருப்பவர்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன.

புதாதித்ய யோகத்தால் பலனடையும் இந்த 4 ராசிக்கார்களும், ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனை வணங்கி, தானங்கள் கொடுத்துவந்தால், வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். அதேபோல், ஆதித்ய ஹிருதய மந்திரத்தை சொல்லி வணங்கி வரலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Daily Rasipalan: ஜூன் மாதம் 13: க்ரோதி ஆண்டு வைகாசி 31ம் நாளுக்கான ராசி பலன்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News