ரவி யோகம்... செவ்வாய்க்கிழமையின் அதிர்ஷ்ட ராசிகள்... பலன்களும் பரிகாரங்களும்

ராசிபலன்: மார்ச் மாதம் 12ஆம் தேதி, மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சந்திரன் செல்லும் நன்னாளில், ரவியோகம், பிரம்மயோகம் மற்றும் ரேவதி நட்சத்திரம் என்னும் சுப சேர்க்கை காரணமாக, பலன் பெறும் ராசிகளை அறிந்து கொள்ளலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 11, 2024, 05:53 PM IST
ரவி யோகம்... செவ்வாய்க்கிழமையின் அதிர்ஷ்ட ராசிகள்... பலன்களும் பரிகாரங்களும் title=

ராசிபலன்: செவ்வாய்க்கிழமை மார்ச் மாதம் 12ம் தேதி, மேஷ ராசிக்கு செல்வார். மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சந்திரன் செல்லும் நன்னாளில், ரவியோகம், பிரம்மயோகம் மற்றும் ரேவதி நட்சத்திரம் என்னும் சுப சேர்க்கை காரணமாக, அதன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், செவ்வாய் கிழமையின் அதிர்ஷ்ட ராசிகளையும், பரிகாரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

மேஷ ராசியினருக்கு மார்ச் மாதம் 12ஆம் தேதி, சாதகமான பலன்களை கொடுக்கும் நாளாக இருக்கும். நீண்ட நாளாக மனதில் நினைத்திருந்த காரியம் நிறைவேறும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேறுவது மனதிற்கு நிம்மதியை அளிக்கும். நிதி ஆதாயங்களால் பொருளாதார நிலை மேம்படும். குடும்ப உறுப்பினர்களுடன் முக்கிய விஷயம் குறித்து ஆலோசனை செய்ய வாய்ப்பு உண்டு. வேலையில் இருப்பவர்கள், சக ஊழியர்களின் உதவியுடன், திட்டமிட்ட பணிகளை விரைவாக செய்து முடிப்பார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மேஷ ராசிக்கான பரிகாரம்: தொல்லைகள் அனைத்திலிருந்தும் விடுபட, பதினோரு அரச இலைகளை சுத்தம் செய்து, அதில் சந்தனத்தால் ராம் என்ற மந்திரத்தை எழுதி, அனுமானுக்கு அர்ச்சனை செய்யவும்.

சிம்ம ராசி

சிம்ம ராசியினருக்கு மார்ச் மாதம் 12ஆம் தேதி முன்னேற்றத்தை அள்ளிக் கொடுக்கும் நாளாக இருக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கி, விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய ஒப்பந்தம் மூலம் வருமானத்தை அதிகரிக்கலாம். கல்வி பயிலும் மாணவர்களின் விருப்பங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள், மேலதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் சரியான நேரத்தில் முடிப்பதில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.

சிம்ம ராசிக்கான பரிகாரம்: தடைகள் நீங்க, செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதும், அனுமன் கோவிலுக்கு சென்று வழிபடுவதும் பலன் அளிக்கும்

கன்னி ராசி

கன்னி ராசியினருக்கு மார்ச் மாதம் 15 ஆம் தேதி, சிறப்பான நாளாக அமையும். எதிர்பாராத வகையில் பணம் வருவது, மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணவரவினால் கடன் தொல்லைகள் நீங்கி, நிம்மதியான வாழ்க்கையை தொடங்குவீர்கள். இலட்சியத்தை நிறைவேற்ற, முக்கியமான நடவடிக்கையை மேற்கொள்வீர்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள்.

கன்னி ராசிக்கான பரிகாரங்கள்: நிதிநிலை மேம்பட, பசுவிற்கு உணவு அளிப்பதும், கோவிலில் அன்னதானம் செய்வதும் பலன் அளிக்கும்.

மேலும் படிக்க | திருமணம் ஆகாத பெண்கள் புதன்கிழமை தலைக்கு குளிக்க கூடாது! ஏன் தெரியுமா?

மகர ராசி

மகர ராசியினருக்கு மார்ச் மாதம் 12ஆம் தேதி, புதிய வேலையை தொடங்கும் சிறப்பான நாளாக இருக்கும். திருமண வாய்ப்பு உண்டு. குடும்ப உறுப்பினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். புதிய திட்டங்களை வகுப்பதால் ஆதாயம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகர ராசிக்கான பரிகாரங்கள்: வாழ்க்கையில் அதிர்ஷ்டம் குறையாமல் இருக்க, 21 நாட்கள் தொடர்ச்சியாக அனுமன் சாலிசா பாராயணம் செய்வது பலன் அளிக்கும்.

கும்ப ராசி

கும்ப ராசியினருக்கு மார்ச் மாதம் 12ஆம் தேதி, வாழ்க்கையில் ஆடம்பரத்தையும் வசதியையும் கொடுக்கும் நாளாக இருக்கும். மாணவர்கள் தேர்வில் சிறப்பாக வெற்றி பெறுவார்கள். பிள்ளைகள் தரப்பிலிருந்து நல்ல செய்தி வரும். செல்வாக்கு மிக்க நபரின் உதவியால் நினைத்த காரியம் நிறைவேறும். வேலை வாய்ப்புகள் தேடி வரும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தினருடன் எதிர்கால திட்டம் குறித்து விவாதிப்பீர்கள்.

கும்ப ராசிக்கான பரிகாரம்: சண்டை சச்சரவுகள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை கிடக்க, செவ்வாய்க்கிழமைகளில் அனுமன் கோவிலுக்கு சென்று, 11 முறை பிரகாரத்தை சுற்றி வழிபடுவது பலன் அளிக்கும். அவ்வாறு செய்யும் போது அனுமன் சோஸ்திரங்கள் அல்லது அனுமன் சாலிசா பாராயணம் செய்யலாம்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இன்னும் 8 நாட்களில் சனி உதயம்: இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, பொற்காலம் ஆரம்பம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News