பணத்திற்கும் சந்தோஷத்திற்கும் குறைவே இருக்காது.. பட்டையை கிளப்ப போகும் சில ராசிகள்

Lucky zodiacs of 2024 March: மார்ச் மாத கிரக பெயற்ச்சிகளால் சில ராசிகள் அதிர்ஷ்ட மழையில் நனைய போகிறார்கள். ஜோதிடத்தில் குறிப்பிட்டுள்ள அத்தகைய அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 26, 2024, 06:28 AM IST
  • கும்பத்தில் சுக்கிரனும் சனியும் இணைவார்கள்.
  • மீனத்தில் சூரியனும் புதனும் இணைந்து புத ஆதித்ய யோகமும் உருவாகும்.
  • மார்ச் மாத கிரக பெயர்ச்சிகள் மற்றும் சேர்க்கைகளினால் பலனடையும் ராசிகள்.
பணத்திற்கும் சந்தோஷத்திற்கும் குறைவே இருக்காது.. பட்டையை கிளப்ப போகும் சில ராசிகள் title=

மார்ச் மாத பலன்கள்: மார்ச் மாதத்தில் முக்கியமாக நான்கு கிரகங்கள் பெயர்ச்சி ஆகின்றன. சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன் உள்ளிட்ட நான்கு முக்கிய ராசிகள் பெயர்ச்சியாகின்றன. ஞானத்தை வழங்கும் கிரகமான புதன் கிரகம் மார்ச் மாதம் ஏழாம் தேதி அன்று மீன ராசிக்கு மாறுகிறது. அதே நாளில் ஆடம்பர வாழ்க்கையை அளிக்கும் சுக்கிரன், கும்ப ராசிக்கு செல்கிறார். மார்ச் 14ஆம் தேதி என்று சூரிய பகவான் மீன ராசிக்கும், மார்ச் 15ஆம் தேதி, செவ்வாய் கும்ப ராசிக்கும் செல்கிறார். இந்த நான்கு பெயர்ச்சிகள் காரணமாக, கும்பத்தில் சுக்கிரனும் சனியும் இணைவார்கள். மீனத்தில் சூரியனும் புதனும் இணைந்து புத ஆதித்ய யோகமும் உருவாகும். இந்நிலையில் மார்ச் மாதத்தில் கிரகங்களின் பெயர்ச்சிகள் மற்றும் சேர்க்கைகளின் தாக்கத்தால் பெரிதும் பலனடையும் ராசிகளை அறிந்து கொள்வோம்.

மேஷ ராசிக்கான மார்ச் மாத பலன்கள்

பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும். நிறைவேறாத பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். வேலையில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, கூடுதல் பொறுப்புகள், சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. மனதிற்கு நிம்மதி கிடைக்கும். எதிர்பாராத பண வரவு மனதிற்கு மகிழ்ச்சி தரும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக செயல்படுவார்கள். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும்.

ரிஷப ராசிக்கான மார்ச் மாத பலன்கள்

அலுவலகத்தில் நீங்கள் மேற்கொள்ளும் கடினமான பணி பாராட்டப்பட்டு, அங்கீகாரம் கிடைக்கும். வேலையில் தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு உண்டு. எதிலும் உறுதியாக இருக்கும் உங்கள் குணம், வேலையை குறித்த நேரத்தில் முடிக்க உதவும். சோதனைகள் எல்லாம் சாதனைகளாக மாற்றும் திறன் இருக்கும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் ஆதாயம் ஏற்படும்.  சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். 

கன்னி ராசிக்கான மார்ச் மாத பலன்கள்

உங்கள் நற்செயல்களால் சமூகத்தில் அந்தஸ்தும் கௌரவம் உயரும். ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்படும். குடும்ப உறவுகள் மகிழ்ச்சியாக எனக்கும். வீடு வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு. குழந்தைகள் தரப்பில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். எதிர்காலம் சார்ந்த எண்ணங்கள் நிறைவேறும். தன வரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும் எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். . சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும்.

மேலும் படிக்க | Astro Traits: அறிவாற்றலை அள்ளிக் கொடுக்கும் புதனின் ஆசி பெற்ற ‘4’ ராசிகள்!

மகர ராசிக்கான மார்ச் மாத பலன்கள்

வாழ்க்கையில் இதுவரை வாட்டி வந்த பிரச்சனைகள் இருந்து விடுபட்டு, நிம்மதியான வாழ்க்கையை தொடங்குவீர்கள். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு உண்டு. பண வரவுக்கான புதிய ஆதாரம் ஏற்படும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழும் வாய்ப்பு கிடைக்கும்.  உறவுகள் மூலம் சந்தோஷம் கிடைக்கும். பண வரவு மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்கும்.பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2024: பதவி உயர்வு, பணபலம் சேரக்கூடிய அதிர்ஷ்டசாலி ராசிகள் இவைதான் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News