6 நாட்களுக்கு பிறகு கிரகங்களின் 'தளபதி' செவ்வாயின் ஆட்டம் ஆரம்பம்.. 4 ராசிகளுக்கு பொற்காலம்

Mars Transit 2024: கிரகங்களில் தளபதியான செவ்வாய் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி மகாரத்தில் பெயரச்சி அடையப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன் கிடைக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 31, 2024, 04:32 PM IST
  • ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ராசியை மாற்றுகிறது.
  • செவ்வாயின் நிலை மாறுவதால், இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
  • அரசியலில் ஈடுபடுபவர்களும் பலன்களைப் பெறலாம்.
6 நாட்களுக்கு பிறகு கிரகங்களின் 'தளபதி' செவ்வாயின் ஆட்டம் ஆரம்பம்.. 4 ராசிகளுக்கு பொற்காலம் title=

செவ்வாய் பெயர்ச்சி 2024: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ராசியை மாற்றுகிறது.  அந்தவகையில் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி அதாவது இன்னும் 6 நாட்களில் செவ்வாய் கிரகம் குருவின் ராசியான தனுசு ராசியிலிருந்து வெளியேறி அதன் உச்ச ராசியான மகர ராசியில் பெயர்ச்சி அடைந்து மார்ச் 15 வரை மகர ராசியில் தான் இருப்பார். செவ்வாய் கிரகத்தில் இந்த மாற்றத்தின் தாக்கம் சில ராசிகளுக்கு சுப பலன்களை கொண்டு வரும். செவ்வாயின் நிலை மாறுவதால், இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். நிறைய வேலை வாய்ப்புகள் வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அரசியலில் ஈடுபடுபவர்களும் பலன்களைப் பெறலாம். எனவே இந்த செவ்வாய் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன் கிடைக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம் (Aries Zodiac Sign): செவ்வாய் பெயர்ச்சியால் இந்த ராசிக்கு மிகவும் மங்களகரமான நேரம் ஆரம்பிக்கும். செவ்வாயின் மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். தொழில், வேலை தேடும் இளைஞர்களுக்கு நேரம் மிகவும் சாதகமாக இருக்கம். குடும்ப உறுப்பினர்களிடம் மரியாதை பெறுவீர்கள். இந்த நேரத்தில் எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றி நிச்சயம் கிடைக்கும். உங்களை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ளுங்கள். 

மேலும் படிக்க | 12 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ராகு சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு அன்னை மகாலட்சுமியின் அருளால் பொற்காலம்

ரிஷபம் (Taurus Zodiac Sign): செவ்வாயின் ராசி மாற்றம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் ரிஷப ராசிக்காரர்களின் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறலாம். மறுபுறம், நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், வியாபாரத்தில் சுப முடிவுகளைப் பெறுவீர்கள், அத்துடன் விரும்பிய முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த நேரத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும், நீங்கள் வேலையில்லாமல் இருந்தால், எங்கிருந்தாவது ஒரு நல்ல வேலைக்கு அழைப்பு வரலாம்.

துலாம் (Libra Zodiac Sign): இந்த ராசிக்காரர்களுக்கு வீடு, வாகனம், வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். வேலையில் முன்னேற்றத்திற்கான நேரம் இது, புதிய வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினால் பிப்ரவரி 10 ஆம் தேதி வரையிலான நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். உணவு தொடர்பான வியாபாரத்தில் இருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள்.

மகரம் (Capricorn Zodiac Sign): மகர ராசிக்காரர்கள், கோபத்தை கட்டுப்படுத்தி தியானம் செய்யவும். உங்களின் உணவுப் பழக்கவழக்கங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உங்களைப் பொருத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அரசு வேலைக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு நல்ல நேரம், முழு ஆற்றலுடன் படிக்ககும். வாகன விபத்துகள் போன்றவற்றில் கவனமாக இருங்கள், அது உங்கள் முகத்தில் கடுமையான காயங்களை ஏற்படுத்தும். காதல் உறவில் இருப்பவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். அதே சமயம், திருமணம் மற்றும் குடும்பத்தில் ஒருசேர உற்சாகம் ஏற்படும். கல்விப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள் மற்றும் வேலையில்லாதவர்களுக்கும் வேலையும் கிடைக்கும்.

மேலும் படிக்க | 500 ஆண்டுக்குப் பின் உருவாகும் கேதார ராஜயோகம், இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News