இன்னும் மூன்றே நாட்கள், இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்: உதயமாகி உச்சம் தொட வைப்பார் புதன்!!

Mercury Rise: புதன் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான சுப பலன்கள் உருவாகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 12, 2024, 12:58 PM IST
  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதன் உதய காலம் வெற்றிகரமானதாக இருக்கும்.
  • தொழில்நுட்ப பணிகள், மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நேரம் மிகவும் நன்றாக உள்ளது.
  • குடும்ப வாழ்க்கை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
இன்னும் மூன்றே நாட்கள், இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்: உதயமாகி உச்சம் தொட வைப்பார் புதன்!! title=

Mercury Rise: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களுக்கு மிக அதிகமான முக்கியத்துவம் உள்ளது. கிரகங்கள் அவ்வப்போது பல மாற்றங்களை மேற்கொள்கின்றன. கிரகங்களின் ராசிகள், நட்சத்திரங்கள், அஸ்தமன, உதய நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த கிரக மாற்றங்களால் அனைத்து ராசிகளிலும் தாக்கங்களை ஏற்படுகின்றன.

கிரகங்களின் இளவரசராக கருதப்படும் புதன் தற்போது அஸ்தமன நிலையில் உள்ளார். அவர் இந்த மாதம் 15 ஆம் தேதி மீன ராசியில் உதயமாவார். இதே நாளில் செவ்வாய் கிரகமும் கும்ப ராசியில் பெயர்ச்சியாக உள்ளது. புத்திசாலித்தனம், பேச்சாற்றல், ஈர்ப்பு, உலக இன்பம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக இருக்கும் புதனின் உதயம் பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. பொதுவாக அஸ்தமன நிலையில் கிரகங்களின் ஆற்றல் குறைந்திருக்கும். உதயமானவுடன் அவற்றின் ஆற்றலும் பலமும் அதிகமாகிறாது.

புதன் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான சுப பலன்கள் உருவாகும். இவர்களுக்கு அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்

மேஷம் (Aries)

புதனின் உதயத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும். வெளிநாடு செல்ல விருப்பம் கொண்டவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும். புதிய வேலைகளில் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த பணிகள் தற்போது நடந்து முடியும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.

ரிஷபம் (Taurus)

ரிஷப ராசிக்காரர்களுக்கு புதன் உதயத்தின் தாக்கத்தால் பண வரவு அதிகமாகும். உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்வீர்கள். காதல் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். இவர்களால் உங்களுக்கு அனுகூலமான பல நன்மைகள் நடக்கும். நீண்ட நாட்களாக நோய்களால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு இப்பொழுது நிவாரணம் கிடைக்கும்.

மேலும் படிக்க | இன்னும் 50 நாட்களில் குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள் ஆரம்பிக்கும்

கன்னி (Virgo)

கன்னி ராசிக்காரர்களுக்கு புதனின் உதயம் உங்களை உயர்த்தும் வகையில் அமையப் போகின்றது. மேல்படிப்பிற்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான பொழுதே கழிப்பீர்கள். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்

துலாம் (Libra)

புதன் உதய காலம் துலாம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அள்ளித் தரும். வீடு வாங்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு இப்பொழுது அதற்கான யோகம் உள்ளது. பணியிடத்தில் பதவி உயர்வும், உதவி ஊதிய உயர்வும் கிடைக்கும். அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தடைபட்டிருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும்

விருச்சிகம் (Scorpio)

விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதன் உதய காலம் வெற்றிகரமானதாக இருக்கும். தொழில்நுட்ப பணிகள், மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நேரம் மிகவும் நன்றாக உள்ளது. குடும்ப வாழ்க்கை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

கும்பம் (Aquarius)

புதன் உதயம் கும்ப ராசிக்காரர்களுக்கு ஆக்கப்பூர்வமான நன்மைகளை அள்ளித் தரும். வெளிநாடு சென்று படிக்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு இப்பொழுது ஆசை நிறைவேறும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகமாகும். சொத்து வாகனம் ஆகும் யோகம் உண்டாகும். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கு இப்பொழுது லாபம் அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கும்பத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இன்னும் 3 நாட்களில் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News