அன்னை லட்சுமியின் செல்லப்பிள்ளைகள் இந்த ராசிகள்: செல்வச்செழிப்பில் திளைப்பார்கள்

Lucky Zodiac Signs: ஜோதிட ரீதியாக, சில ராசிக்காரர்கள் மீது சதா சர்வ காலமும் லட்சுமி அன்னையின் அருள் இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 28, 2023, 02:40 PM IST
  • லட்சுமி தேவிக்கு விருப்பமான ராசிகளில் மீன ராசியும் ஒன்றாகும்.
  • இந்த ராசிக்காரர்கள் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டிய அவசியமே ஏற்படாது.
  • அன்னை லட்சுமியின் ஆசீர்வாதம் இவர்கள் மீது எப்போதும் இருக்கும்.
அன்னை லட்சுமியின் செல்லப்பிள்ளைகள் இந்த ராசிகள்: செல்வச்செழிப்பில் திளைப்பார்கள் title=

லட்சுமி அன்னைக்கு பிடித்தமான ராசிகள்: அன்னை லட்சுமி செல்வத்தின் தெய்வமாக வணங்கப்படுகிறார். லட்சுமி அன்னையின் அருள் ஒருவருக்கு கிடைத்திவிட்டால், அவருக்கு வாழ்வில் எந்த குறையும் ஏற்படாது. அவர் செல்வச்செழிப்பில் மிதப்பார். ஏழ்மை அவரிடம் நெருங்க முடியாது. அவரது குடும்பம் மகிழ்ச்சியிலும் செழிப்பிலும் திளைக்கும். அவருக்கு எந்த ஒரு விஷயத்திலும் அதிருப்தியோ ஏமாற்றமோ ஏற்பட வாய்ப்பில்லை. 

அன்னை லட்சுமி நமக்கு செல்வங்களை அள்ளித்தருவது மட்டுமல்லாமல், அந்த செல்வத்தை வைத்து பல நல்ல செயல்கல்களை செய்வதற்கான பண்பையும் அவர் அளிக்கிறார். அனைத்தையும் தனக்கு தனக்கு என வைத்துக்கொள்ளாமல் இல்லாதவர்களுக்கு கொடுத்து, சமூக பணிகளிலும், அறம் வளர்க்கும் பணிகளிலும் நாம் பயன்படுத்தினால், அன்னை லட்சுமி நமக்கு இன்னும் அதிக செல்வத்தை வாரி வழங்குவார். லட்சுமி அன்னைக்கு பிடித்த செயல்களை செய்து அவரை பூஜித்து வந்தால், ஏழ்மை நம்மை அண்டாமல் அவர் நம்மை காத்து அருள்வார்.

அன்னை என்ற பெயருக்கு ஏற்ப, அன்னை லட்சுமிக்கு அனைவரும் அவர் பிள்ளைகளே. அனைவர் மீதும் அவர் சரிசமமான அருளை பொழிகிறார். எனினும், ஜோதிட ரீதியாக, சில ராசிக்காரர்கள் மீது சதா சர்வ காலமும் லட்சுமி அன்னையின் அருள் இருக்கும். இந்த ராசிகள் அவருக்கு பிடித்தமான ராசிகளாக கருதப்படுகின்றன. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

அன்னை லட்சுமியின் அன்புக்கிரிய ராசிகள் இவைதான்:

ரிஷப ராசி

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த கிரகம் மகிழ்ச்சி-செல்வம் மற்றும் செல்வம்-தானியங்களின் சின்னமாக கருதப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் லக்ஷ்மி அன்னைக்கு மிகவும் பிரியமானவர்கள். அவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் நிதி நெருக்கடியை சந்திப்பதில்லை. ரிஷப ராசிக்காரர்களுக்கு அன்னை லட்சுமியின் அருள் எப்போதும் இருக்கும். 

சிம்ம ராசி

சிம்ம ராசியின் அதிபதியாக சூரிய பகவான் கருதப்படுகிறார். சூரிய பகவான் அனைத்து கிரகங்களுக்கும் ராஜா. அவரது கூர்மை, உற்சாகம் மற்றும் உறுதியின் தாக்கம் சிம்ம ராசிக்காரர்களிடமும் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு அன்னை லட்சுமியின் அருளும் சேர்வதால், தங்கள் கடின உழைப்பின் பலத்தால் அனைத்து துறையிலும் வெற்றி பெறுகிறார்கள். சிம்ம ராசிக்காரர்களின் பொருளாதார நிலை எப்போதும் மிகவும் வலுவாக இருக்கும்.

மேலும் படிக்க | லக்ஷ்மி நாராயண ராஜயோகம்... அக்டோபருக்கு முன் ‘இந்த’ ராசிகள் செல்வந்தர்களாவது உறுதி!

துலா ராசி

துலாம் ராசிக்கும் சுக்கிரன்தான் அதிபதி. இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை அன்னை லக்ஷ்மியின் ஆசீர்வாதத்தால் எந்த வித தடையும் இல்லாமல் சீராக செல்லும். இவர்கள் எந்த வித பெரிய பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டிய நிலை எப்போதும் ஏற்படாது. அன்னை லட்சுமியின் அருளால் இவர்கள் எப்போதும் மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். செவ்வாய் கிரகங்களின் தளபதியாகக் கருதப்படுகிறது. மேலும் வீரம், வலிமை, தைரியம் மற்றும் வலிமை ஆகியவற்றின் காரணியாக செவ்வாய் கிரகம் பார்க்கப்படுகின்றது. இந்த ராசிக்காரர்களுக்கு எப்போதும் லட்சுமி அன்னையின் அருள் கிடைக்கும். வேலை-வியாபாரத்தில் வெற்றியின் உச்சத்தை தொடுவார்கள்

மீன ராசி 

லட்சுமி தேவிக்கு விருப்பமான ராசிகளில் மீன ராசியும் ஒன்றாகும். இந்த ராசிக்காரர்கள் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டிய அவசியமே ஏற்படாது. அன்னை லட்சுமியின் ஆசீர்வாதம் இவர்கள் மீது எப்போதும் இருக்கும். அவருடைய அருளால், இவர்களுக்கு எப்போதும் நிதி தட்டுப்பாடு ஏற்படாமல் செல்வம் நிறைந்திருக்கும். இதை கொண்டு அதிக தான தர்மம் செய்வார்கள். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனியின் மாற்றத்தால் உருவாகும் ஷஷ ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான ராஜயோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News