கும்பத்தில் சூரியன் பெயர்ச்சி: 2 நாட்களில் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம், பணத்தில் புரள்வார்கள்

Sun Transit: சனியின் ராசியில் சூரியனின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 11, 2024, 03:23 PM IST
  • துலா ராசிக்காரர்களுக்கு சூருயனின் ராசி மாற்றம் சிறப்பான நற்பலன்களை அள்ளித் தரும்.
  • இந்த காலத்தில் துலா ராசிக்காரர்களின் படைப்பாற்றல் அதிகரிக்கும்.
  • உங்கள் அறிவாற்றலிலும் மேம்பாடு ஏற்படும்.
கும்பத்தில் சூரியன் பெயர்ச்சி: 2 நாட்களில் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம், பணத்தில் புரள்வார்கள்

Sun Transit: 2024 ஆம் ஆண்டின் துவக்கம் முதலே பல கிரகங்களின் ராசிகளிலும், இயக்கங்களிலும், நிலைகளிலும் பலவித மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பொதுவாகவே அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. கிரகங்களின் ராசி மாற்றங்களும், நட்சத்திர மாற்றங்களும், அஸ்தமன, உதய நிலையும், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி ஆகிய மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

Add Zee News as a Preferred Source

கிரகங்களின் அரசன் என்று கூறப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறார். சூரியனின் இந்த மாற்றம் சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதம் நாளை அதாவது பிப்ரவரி 13ஆம் தேதி சூரியன் மாலை 3:31 மணிக்கு கும்ப ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். சனியின் ராசியில் சூரியனின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களது வாழ்வில் வெற்றிகள் குவியும், பண வரவு அதிகமாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.

சூரியன் பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்களை அனுபவிக்க உள்ள ராசிகள்

மேஷம் (Aries)

கிரகங்களின் அரசன் சூரியன் சனியின் ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சியாவது மேஷ ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்களை அளிக்கும். சூரியனின் தாக்கத்தால் இவர்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறும். புதிய தொழிலை துவங்க நினைப்பவர்கள் இந்த காலத்தில் அதை செய்யலாம். வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் பெயரும் மதிப்பும் உயரும். அலுவலகத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். முன்னர் செய்த முதலீடுகளின் பலன் இப்போது உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத் துணையுடன் உங்கள் உறவு முன்பை விட வலுவாக இருக்கும்.

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை, நல்ல காலம் ஆரம்பம்

ரிஷபம் (Taurus) 

கும்ப ராசியில் சூரியனின் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். இவர்களின் நிதிநிலை மேம்படும். பண வரவு அதிகமாகும். இந்த காலத்தில் புதிய வணிகத்தை தொடங்கினால் அதில் நல்ல லாபம் ஈட்ட முடியும். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் தடைப்பட்ட அனைத்து காரியங்களும் இப்போது வெற்றிகரமாக நடந்து முடியும். பதவி உயர்வு கிடைக்கும். உங்களுக்கு புதிய பொறுப்புகளும் வேலைகளும் கிடைக்கும். 

துலாம் (Libra)

துலா ராசிக்காரர்களுக்கு சூருயனின் ராசி மாற்றம் சிறப்பான நற்பலன்களை அள்ளித் தரும். இந்த காலத்தில் துலா ராசிக்காரர்களின் படைப்பாற்றல் அதிகரிக்கும். உங்கள் அறிவாற்றலிலும் மேம்பாடு ஏற்படும். இது உங்கள் வாழ்க்கைக்கு லாபகரமானதாக இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள துலா ராசிக்காரர்களுக்கு இப்போது லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

மேலும் படிக்க | சனி அஸ்தமனம்: இன்று முதல் இந்த ராசிகள் மீது சனியின் அருள் மழை... கோடீஸ்வர யோகம் ஆரம்பம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News