சுக்கிரன் பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை, நல்ல காலம் ஆரம்பம்

Venus Transit: இந்த ராசி மாற்றத்தால் அனைத்து ராசிகளிலும் மாற்றங்கள் ஏற்படும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி அதிர்ஷ்டமானதாக இருக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 11, 2024, 01:34 PM IST
  • சுக்ரன் மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் கும்ப ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் அதிகமாகும்.
  • அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
  • குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.
சுக்கிரன் பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை, நல்ல காலம் ஆரம்பம் title=

Venus Transit: ஜோதிட சாஸ்திரத்தின்படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்கின்றன. சில சமயங்களில் ஒரே ராசியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கையும் நடக்கின்றன. இவற்றால் பல ராஜயோகங்கள் உருவாகின்றன. கிரக சேர்க்கைகளால் ஏற்படும் ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். 

பணம், புகழ், செல்வம், அறிவாற்றல் ஆகிய பல பண்புகளின் காரணி கிரகமாக உள்ள சுக்கிரன் பிப்ரவரி 12ஆம் தேதி தனது ராசியை மாற்ற உள்ளார். அவர் மகர ராசிக்கு பெயர்ச்சி ஆவார். இந்த ராசி மாற்றத்தால் அனைத்து ராசிகளிலும் மாற்றங்கள் ஏற்படும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த காலத்தில் இவர்களுக்கு பல வெற்றிகள் குவியும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.

சுக்கிரன் செவ்வாய் சேர்க்கையால் மகரத்தில் உருவாகும் ராஜயோகம்

தற்போது கிரகங்களின் சேனாதிபதியும், தைரியம், நிலம் மற்றும் மகிழ்ச்சிக்கு காரணி கிரகமான செவ்வாய் மகரத்தில் இருக்கிறார். பிப்ரவரி 12ஆம் தேதி சுக்ரனும் மகர ராசியில் பெயர்ச்சி ஆவர். ஏற்கனவே மகரத்தில் சூரியனும் புதனும் சஞ்சரித்து வருகிறார்கள். இந்த நான்கு கிரகங்களின் சேர்க்கை அற்புதமான தனசக்தி ராஜ யோகத்தை உருவாக்குகின்றது.  இதனால் அதிர்ஷ்ட மழையில் நனையுள்ள ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேஷம் (Aries)

மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் மகிழ்ச்சியை அள்ளித் தரும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகமாகும். முக்கியமான ஒரு ஒப்பந்தத்தை இப்போது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நிதிநிலை நன்றாக இருக்கும். நான்கு கிரகங்கள் சேர்ந்து சதுர்கிரகி யோகம் (Chaturgrahi Yog) அமைவதால் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகமாகும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகமாகும்.

தனுசு (Sagittarius)

சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கத்தால் பணியிடத்திலும் வியாபாரத்திலும் வெற்றிகள் குவியும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வீட்டில் வசதிகளும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகமாக இருக்கும். நிதிநிலை நன்றாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரணமான ஒத்துழைப்பை பெறுவீர்கள். உங்கள் ஆசைகள் அனைத்தும் இப்போது நிறைவேறும்.

மேலும் படிக்க | சனி அஸ்தமனம்: இன்று முதல் இந்த ராசிகள் மீது சனியின் அருள் மழை... கோடீஸ்வர யோகம் ஆரம்பம்

மகரம் (Capricorn)

மகர ராசியில் நான்கு கிரகங்களின் சேர்க்கை இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நிதிநிலை நன்றாக இருக்கும். பணியிடத்திலும் வணிகத்திலும் அபார வெற்றிகள் கிடைக்கும். புதிய வேலைகளை இப்போது தொடங்கலாம். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு இப்போது நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.

கும்பம் (Aquarius)

சுக்ரன் மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் வெற்றிகள் அதிகமாகும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா சென்று வருவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். இதனால் உங்களுக்கு சாதகமான நன்மைகள் ஏற்படும். வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு இப்போது வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. குழந்தைகள் மூலம் நல்ல செய்தியை பெறுவீர்கள்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

மேலும் படிக்க | கும்பத்தில் நிகழும் சனி-சூரிய சேர்க்கை.. இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News