பணத்தை வழங்க ராகு ரெடி! செலவு வைக்க கேதுவும் தயார்! சிவலிங்கத்திற்கு ஜலாபிஷேகம் அவசியம்

Raghu-Kethu Transit: எப்போதும் வக்ர நிலையில் பயணிக்கும் நிழல் கிரகமான ராகு அனைவருக்கும் எப்போதுமே அசுப பலன்களை மட்டுமே தருவதில்லை. ராகு சரியான இடத்தில் அமர்ந்திருந்தால், சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 10, 2023, 02:12 PM IST
  • ராகு கேதுவின் ஆசி கிடைக்க சுலப வழி
  • சிவபூஜை செய்தால் ராகு கேது மகிழ்வார்கள்
  • திங்கட்கிழமையில் சிவலிங்கத்திற்கு நீராபிஷேகம் சிறந்தது
பணத்தை  வழங்க ராகு ரெடி! செலவு வைக்க கேதுவும் தயார்! சிவலிங்கத்திற்கு ஜலாபிஷேகம் அவசியம் title=

இன்னும் ஒரு மாதத்தில் ராகு பகவான், மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். வக்ர கதிக்கு செல்லும்  ராகுவின்  ராசி மாற்றம் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் மாற்றத்தைக் கொண்டுவருகின்றன. நவக்கிரகங்கள் தங்கள் இடத்தில் இருந்து நகர்ந்துக் கொண்டே இருக்கின்றன. சில சமயங்களில் கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் ஒரே ராசியில் சேரும்.

இது போன்ற கிரக சேர்க்கைகள் சிலருக்கு தோஷத்தையும் பிறருக்கு வரத்தையும் அளிக்கின்றன. எனவே, ஆக்கப்பூர்வமாகவோ அல்லது மோசமாகவோ அனைத்து ராசிகளும் பாதிக்கப்படுகின்றன. அக்டோபர் 30, 2023 அன்று மதியம் 12.30 மணிக்கு ராகு பகவான், மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

எப்போதும் வக்ர நிலையில் பயணிக்கும் நிழல் கிரகமான ராகு அனைவருக்கும் எப்போதுமே அசுப பலன்களை மட்டுமே தருவதில்லை. ராகு சரியான இடத்தில் அமர்ந்திருந்தால், சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். வக்ர கதியில் இயங்கும் ராகுவின் ராசி மாற்றம் உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றத்தைக் கொண்டு வரும்?

மேலும் படிக்க | ஆவணி மாதத்தின் இறுதி வாரத்திற்கான ராசிபலன்கள்! செப்டம்பர் 11-18 ஜோதிட கணிப்பு

ராகு கேது பெயர்ச்சி 2023
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு, ராகு பெயர்ச்சி வரப்பிரசாதமாக அமையும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பிறர் உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள். ஆண்டு இறுதிக்குள் உங்கள் பொருளாதார நிலை தற்போது இருப்பதைவிட மேலும் அதிகமாக வலுப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கெளரவமும், பதவி உயர்வும் வாய்க்கும். தொழில் செய்பவர்களுக்கு தொழில் முன்னேற்றம் அதிகரிப்பதோடு அங்கீகாரம் கிடைக்கும்.

கடகம்
ராகு சஞ்சாரம், கடக ராசிக்காரர்களுக்கு நீண்டகாலத் தடைகளை நீக்கும். இந்த காலகட்டத்தில் புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் உங்கள் கனவை நனவாக்கலாம். தொழில் முயற்சிகளும் லாபகரமாக அமையலாம். பண வரத்து சாதகமாக இருக்கும். கொடுத்த வாக்குகளை நிறைவேற்றி பிறரின் பாராட்டைப் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | ஆவணி மாதத்தின் இறுதி வாரத்திற்கான ராசிபலன்கள்! செப்டம்பர் 11-18 ஜோதிட கணிப்பு

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சி, சாதகமான பலன்களை கொடுக்கும். இலக்குகளை அடைவது ஒப்பீட்டளவில் எளிதாகிவிடும். இருப்பினும், ஆரம்பத்தில் செலவுகள் அதிகரிக்கலாம், ஆனால் காலப்போக்கில், செலவுகளை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும். ராகுவின் தீங்கில் இருந்து தப்பிக்க, திங்கட்கிழமைகளில் சிவலிங்கத்திற்கு ஜலாபிஷேகம் செய்யுங்கள்.  

மீனம்
2023 அக்டோபரில் மீன ராசியில் ராகு சஞ்சரிப்பது மீன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த காலம் குறிப்பிடத்தக்க தொழில் வளர்ச்சியைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, தொழில் முன்னேற்றத்துடன், நிதி நிலைமையும் மேம்படும். இதுவரை தடைபட்டு நின்றிருந்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். மனதில் நிம்மதியும், வாழ்க்கையில் பிடிப்பும் அதிகரிக்கும்.

ராகு பெயர்ச்சியின் தாக்கம் என்பது, ஒருவரின் ஜனன ஜாதகம் மற்றும் பிற கிரக நிலைகளைப் பொறுத்து மாறுபடும், இந்த காலகட்டத்தில் விழிப்புடன் இருப்பதும், கடவுள் வழிபாடும் அவசியம்.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | வக்ர நிவர்த்தி அடையும் சனி... ‘இந்த’ ராசிகளுக்கு நவம்பர் முதல் கொண்டாட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News