சனி பெயர்ச்சி 2023: கும்ப ராசிக்கு மாறும் சனி பகவான்! எந்த ராசிக்கு என்ன சனி?

Sani Peyarchi 2023: இன்று மாலை 5:20 மணிக்கு சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் மாறுகிறார்.   

Written by - Yuvashree | Last Updated : Dec 20, 2023, 05:03 PM IST
  • சனிபகவான் இன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார்.
  • ஒரு சில ராசியினருக்கு ராஜ யோகம் அடிக்கிறது.
  • சில ராசிகளுக்கு பண வரவு கொட்டப்போகிறது.
சனி பெயர்ச்சி 2023: கும்ப ராசிக்கு மாறும் சனி பகவான்! எந்த ராசிக்கு என்ன சனி?  title=

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை திருநள்ளாற்றில் நடைபெறும் சனிபெயர்சி விழா, இன்று நடைப்பெறுகிறது. வாக்கிய பஞ்சாங்கப்படி டிசம்பர் 20ஆம் தேதியான இன்று, மாலை 5:20 மணிக்கு சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் மாறுகிறார். இதனால், எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்? இங்கு பார்ப்போம் வாங்க. 

இடம் மாறும் சனி பகவான்:

நவகிரகங்களில் முக்கிய கிரகமாக கருதப்படுபவர், சனி பகவான். இவர், முக்கியமான கிரகமாக இருந்தாலும் பலருக்கும் இவரைக்கண்டாலே பயம்தான். 12 ராசிகளில், ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடம் தங்கும் சை பகவாம், இந்த வருடம் வேறு ஒரு ராசிக்கு மாறுகிறார். இவர், மொத்த ராசிகளையும் சுற்றி வர, கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகிறது. திருநள்ளாறு கோவிலின் பஞ்சாங்கத்தின்படி, சனிபகவான் இன்றைய தேதியில் (டிசம்பர் 20) மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயருகிறார். 

சனி பகவான் கொடுக்கவும் செய்வார், கெடுக்கவும் செய்வார் என ஆன்றோர்-சான்றோர் கூவதுண்டு. இவர் ஒரு ராசியில் இரண்டரை வருடங்கள் இருப்பதால், அந்த ராசியை சேர்ந்தவர்களுக்கு சுப மற்றும் அசுப பலன்கள் உண்டு என கூறப்படுகிறது. சனி பகவானின் இந்த இட மாற்றத்தால் சில பல ராசியினருக்கு அவர்களின் வாழ்க்கையில் ஏற்றமும், வாழ்வில் தொய்வும் ஏற்படலாம். 

சனி பகவானால் யோகம்:

சனிபகவானின் இடம் மாற்றத்தால், அவரது பார்வை 3,7 மற்றும் 10 ஆகிய இடங்களின் மீது விழுகிறது. மூன்றாம் பார்வையாக மேஷ ராசியையும், ஏழாம் பார்வையாக சிம்ம ராசியையும் 10ஆம் பார்வையாக விருச்சிக ராசியையும் சனி பகவான் பார்க்கிறார். தற்போது சனிபெயர்சியால் ஏழரைச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனி என இந்த சனிக்களால் சிலர் வாழ்வில் இன்னல்களை சந்திக்க நேரிடலாம். அது மட்டுமன்றி, இதனால் சிலருக்கு பல அதிர்ஷ்டங்களும் காத்திருக்கின்றன. அப்படி துயரத்தையும், உயரத்தையும் பார்க்க இருக்கும் ராசிகள் யார் யார் தெரியுமா? 

லாபச்சனி:

12 ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசிக்கு சனி பகவானின் பெயர்சியால் லாபச்சனி ஏற்படும். இதனால், அவர்கள் தங்களின் வாழ்வில் பொருளாதார ரீதியாக மேன்மையடையவும் வாய்ப்புகள் உள்ளன. எடுக்கும் முயற்சியில் வெற்றியும் கிடைக்கும். 

ஜீவனச்சனி:

ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு, சனிபகவானின் இடமாற்றத்தால் அவர்களின் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். ஆனால், அதே சமயத்தில் இந்த ராசியை சேர்ந்தவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் கருத்து மோதலில் ஈடுபடவும் வாய்ப்புகள் உள்ளது. அதனால், பேசுகையில் அதிக கவனம் தேவை. 

பாக்கியச்சனி:

மிதுன ராசியை சேர்ந்தவர்களுக்கு, பாக்கியச்சனி தொடங்குகிறது. சனி பகவானின் இடமாற்றத்தால் இவர்களின் வாழ்வில் யோகங்கள் பல காத்துக்கொண்டுள்ளன. பணவரவு இரட்டிப்பாகவும், சொத்துக்கள் வாங்கவும் வாய்ப்புகள் உள்ளன. இந்த சனி பெயர்சி காலத்தில் தான தர்மங்கள் செய்வதால் பிற்காலத்தில் பலன் உண்டு. 

அஷ்டம சனி:

கடக ராசிக்காரர்கள், இந்த சனி பெயர்ச்சியால் சில தங்குதடைகள் ஏற்படலாம். ஆனால் அவையும் இறுதியில் லாபகரமானதாகவே அமையும். இந்த காலத்தில் எட்டாம் வீட்டில் சனி அதிபதியாக அமர்வார். இதனால், திடீர் பண வரவு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. 

கண்டச்சனி:

சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு சனிபகவான் ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக பயணம் செய்ய உள்ளார். ஆனாலும், இதனால் இந்த ராசியை சேர்ந்தவர்களின் வாழ்வில் பெரிதாக பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பில்லை. சனி பகவானின் இந்த இடமாற்றத்தால் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும், சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். இவர்களுக்கு சில எதிர்பாராத நல்ல மாற்றங்களும் ஏற்படும். 

ராஜயோக சனி:

கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு சனிப்பெயர்சியால் நோய்கள் தீரும். சொந்த வீடு, நகை போன்று சொத்துக்களை வாங்கி வைப்பீர்கள். புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு லாபம் கிட்டும். இதனால், செல்வமும் அதிகரிக்கும். 

பூர்வ புண்ணிய சனி:

சனி பகவானின் இடப்பெயர்சியால், துலாம் ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கும் காலம் ஆரம்பிக்கும். முன்னர் செய்த புண்ணியங்கள், நல்ல வடிவில் இந்த முறை உங்கள் கைகளில் வந்து சேரும். திருமண தடைகள் நீங்கி குடும்பம் விருத்தி அடையும். இந்த ராசிகளுக்கு சனிப்பெயர்ச்சியால் பல நன்மைகள் கிடைக்க இருக்கிறது. 

அர்த்தாஷ்டம சனி:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் மாற்றத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சனைகளுக்கு இதன் பிறகு ஒரு முடிவு கிடைக்கலாம். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும், பண வரவு அதிகரிக்கும். இந்த ராசியை சேர்ந்தவர்கள், ஆஞ்சநேயரை வழிபடுவது தடைகளை தகர்க்க உதவும். 

மேலும் படிக்க | 30 ஆண்டுக்குப் பின் கும்ப ராசியில் சனி.. இந்த ராசிகளுக்கு திடீர் திருப்பம், ராஜயோகம்

தைரிய சனி:

தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மைகள் நடக்க இருக்கிறது. இதுவரை கைக்கு வந்து சேராத பணம் வந்து சேரும். இந்த சனிப்பெயர்ச்சி காலம், இவர்களுக்கு முன்னேற்றம் தரும் காலமாக அமையும். இவர்கள், திருநள்ளாறு சனிபகவானை வணங்கி வருவது நல்லது. 

பாத சனி:

மகர ராசிக்காரர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாக சனியால் அதிகம் துயரப்பட்டுக்கொண்டிருந்தனர். அடுத்து வர இருக்கும் இரண்டரை ஆண்டுகளுக்கும், இந்த ராசியினர் கவனமாக நடந்து கொள்வது நல்லது. தன வரவு, லாபம் என தொழில் ரீதியாக முன்னேற்றம் அடைவார்கள். ஆஞ்சனேயரை வழிபடுவது தடைகளை நீக்கும். 

ஜென்ம சனி:

சனி பகவானின் இடப்பெயர்ச்சிஆல் கும்ப ராசியை சேர்ந்தவர்களுக்கு ஜென்ம சனி நடைப்பெறும். இதனால், இவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் நிம்மதியும் மன அமைதியும் மேம்படும். சில தோல்விகள் வந்தாலும் அதிலிருந்து நன்றாகவே பாடம் கற்றுக்கொள்வீர்கள். 

விரைய சனி:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வருட சனிப்பெயர்ச்சியால் பணம் அதிகம் செலவாக வாய்புள்ளது. எனவே, சிலர் சொத்துக்கள் வாங்க முயல்வீர்கள். மீன ராசிக்காரர்களுக்கு, இது ஏழரை சனி என்பதால் முயன்றவரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும். இதனால், தங்களை நோக்கி வரும் தடைகளை தகர்த்தெரியலாம். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெ தீபம் ஏற்றி வழிப்படுவது சிறந்தது. 

மேலும் படிக்க | 12 ஆண்டுக்குப் பிறகு உருவாகும் சக்திவாய்ந்த அபூர்வ ராஜயோகம், இந்த ராசிகளுக்கு பொற்காலம்

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News