ஜோதிடத்தில், தனிநபர் மட்டுமல்ல, ஒரு நாட்டின் அல்லது உலக நிலையின் எதிர்காலம் குறித்து கணிக்கையில் கிரகங்களின் நிலைகள், முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகரும் போதும், அவ்வாறு நகரும்போது கிரகங்கள் இடையே ஏற்படும் இணைவின் போதும், அனைத்து ராசிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் பாதிப்பு ஏற்படுகிறது. அது சில சமயங்களில் சுப பலன்களாகவும், சில சமயங்களில் அசுப பலன்களாகவும் இருக்கின்றன. அந்த வகையில், சனி சுக்கிரன் இணைவு காரணமாக, அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
சனி சுக்கிரன் இணைவு
கும்ப ராசியில் சனிபகவான் தற்போது வீற்றிருக்கிறார். இந்நிலையில் மார்ச் மாதம் ஏழாம் தேதி, காலை 10:33 மணிக்கு, சுக்கிரனும் கும்ப ராசிக்குள் நுழைகிறார். இதனால் சனி பகவான் சுக்கிரனும் சந்தித்துக் கொள்வார்கள். இதனால் சில ராசிகளுக்கு, வாழ்க்கையை மாற்றும் அளவு அதிர்ஷ்டம் கை கொடுக்கும்.
ரிஷப ராசிக்கான பலன்கள்
ரிஷப ராசியினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வந்து சேரும். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் சம்பள உயர்வு பதவி உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில், நல்ல முன்னேற்றம் இருக்கும். கை வைத்த காரியம் அனைத்துமே வெற்றி பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுப்பீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் வாய்ப்பு ஏற்படும்.
கடக ராசிக்கான பலன்கள்
கடக ராசியினரை பொறுத்தவரை சுக்கிரனும் சனியும் இணைவது, வாழ்க்கையில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்து சேர்க்கும். பல சாதகமான மாற்றங்கள் வாழ்க்கையில் ஏற்படும். வாய்ப்பு வசதிகள் கூடும். இதுவரை நிறைவேறாமல் தள்ளிப்போன வேலைகள் எல்லாம், மடமடவென்று நிறைவேறும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் ஏற்படும்.
துலாம் ராசிக்கான பலன்கள்
துலாம் ராசிக்கு சுக்கிரன் தான் அதிபதி. இந்நிலையில் சனிபகவானுடன் சுக்கிரன் இணைந்து இருப்பதால் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்துக்கும் பணத்திற்கும் குறைவை இருக்காது. மனதை மகிழ்விக்கும் எதிர்பாராத நல்ல செய்திகள் வந்து சேரும். திடீரென்று ஏற்படும் பணவரவு வாழ்க்கையில் செழிப்பை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் பெறலாம்.
மகர ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்
மகர ராசிக்கு சனி சுக்கிரன் இணைவு சிறந்த வாய்ப்புகளை உண்டாக்கும். அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி நீங்கள் வாழ்க்கையில் சிறப்பாக முன்னேறுவீர்கள். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். குழந்தைகள் தரப்பிலிருந்து நல்ல செய்தி வரும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும்.
கும்ப ராசிக்கான பலன்கள்
சனியும் சுக்கிரனும் இணைவதால், கை வைத்த காரியம் எல்லாம் வெற்றி தான். ஆடம்பரத்திற்காக செலவு செய்வீர்கள். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களுடன் நல்லுறவு இருக்கும். முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கப்படும். பணத்திற்கு குறைவிருக்காது. வருமானம் சிறப்பாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.