இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?

Today Rasi Palan Tamil : 2024 மே 2ஆம் தேதியான இன்று, எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை கொட்டப்பாேகிறது என்பதை இங்கு பார்க்கலாமா?   

Written by - Yuvashree | Last Updated : May 2, 2024, 07:38 AM IST
  • மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளுக்கான பலன்கள்
  • 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கு!
  • அந்த 4 ராசிகள் என்னென்ன?
இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?  title=

Today Rasi Palan Tamil : மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் 12 ராசிகளுக்கும், அவற்றின் கிரகப்பலன்களை பொறுத்து அந்த நாள் அமையும். அந்த வகையில், இன்று எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது என்பதை பார்க்கலாமா?

மேஷம்:

மேஷ ராசியை சேர்ந்தவர்களுள், ஒரு சிலருக்கு இன்று நிதி ரீதியாக தனிப்பட்ட வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடலை நன்றாக பார்த்துக்கொள்வதில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வீர்கள். பயணங்கள் மேற்கொள்வதால் அனுகூலமான நட்பு வட்டாரம் கிடைக்கும். சொத்து வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். 

ரிஷபம்:

தொழில் செய்பவர்கள் சிலருக்கு இன்று நல்ல லாபம் உண்டாகலாம். உடல் நிலையை சீராக பார்த்துக்கொள்வதில் கவனம் கொள்ள வேண்டும். ஆசுவாசப்படுத்திக்கொள்ள எங்காவது வெளியில் செல்வீர்கள். அனைத்து வேலைகளையும் சரியான சமயத்தில் செய்து முடிப்பீர்கள். 

மிதுனம்:

உங்கள் வாயிற்கதவை அதிர்ஷ்டம் தேடி வரும் நாள் இது. உங்களை பெருமைப்படுத்தும் விஷயம் ஒன்றை இன்று செய்வீர்கள். உங்களது நடவடிகைகளால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகலாம். நீங்கள் முன்னர் செய்து கொடுத்த வேலைக்கு பாராட்டு கிடைக்கலாம். ஒரு சிலர், இன்று வீட்டு மனையில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். 

கடகம்:

நிதி ரீதியாக இன்று உங்களுக்கு எந்த பாதகமும் இல்லை. வேலை செய்யும் இடத்தில் உங்களது வழிக்காட்டலை எதிர்பார்த்து சிலர் காத்திருக்கலாம். உங்களது மகிழ்ச்சியான மனநிலை பிறரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் வெளியில் சென்று மகிழ்வீர்கள். முன்னர் சொத்துக்களில் செய்து வைத்த முதலீடு, உங்களுக்கு திரும்பி வரலாம். 

சிம்மம்:

உங்கள் நிதி நிலையை உயர்த்தும் வகையில் இன்று உங்களை தேடி ஒரு அதிர்ஷ்டம் வரலாம், அதை பிடித்துக்கொண்டால் உயரத்திற்கு செல்வீர்கள். வேலை செய்ததற்கு தக்க சன்மானம் உங்களை வந்து அடையலாம். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். புதியவர்களுடன் நட்பு ஏற்படுத்திக்கொள்ளும் சூழ்நிலைகள் உருவாக்கப்படலாம். 

கன்னி ராசி:

நிதி நிலையை பாதுகாத்துக்கொள்ள தக்க முடிவுகளை எடுக்க வேண்டிய நாள் இது. உடல் நிலையில் ஏற்படும் பிரச்சனை காரணமாக சிலர், மருத்துவரை நாடும் நிலை ஏற்படலாம். உங்கள் வேலையில் இன்று கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். சொத்துக்களால், லாபம் குவிக்கும் விஷயங்கள் நடைபெறலாம். 

துலாம்:

உங்கள் உடல் நலனை பத்திரமாக பார்த்துக்கொள்ள தகுந்த முயற்சிகளை எடுப்பீர்கள். உங்கள் திறன்களை வைத்து நன்றாக வேலை செய்து, உயர் அதிகாரியிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். உங்கள் மீது அன்பும் அக்கறையும் செலுத்தும் ஒருவரை நீங்கள் சந்திக்க நேரிடலாம். 

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி பலன்கள்... ‘இந்த’ ராசிகள் பார்த்து கொஞ்சம் சூதானமாக இருங்க..!!

விருச்சிகம்:

நிலையான வருமானம் இன்று உங்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும். உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் முன்னோடியாக திகழ வாய்ப்புள்ளது. உறவினர்களின் வீட்டு சுப காரியத்தில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள். வீடு தேடுபவர்களுக்கு இன்று நல்ல செய்தி காத்திருக்கிறது. உங்கள் வாழ்க்கையை நினைத்து பெருமைப்படும் விஷயங்கள் நடைபெறலாம். 

தனுசு:

தற்போது செய்து கொண்டிருக்கும் வேலையில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கலாம். உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியமாகும். உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் சில காரியங்கள் வீட்டில் நடைபெறலாம். பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. சொத்து வாங்குவதற்கு இன்று நல்ல நாளாகும். உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் ஒருவரை இன்று நீங்கள் சந்திக்க நேரிடும். 

மகரம்:

முன்னர் செய்து வைத்த முதலீடுகள் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கும் நாள் இது. உங்கள் வேலைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினருடன் இருக்கும் உறவு இன்னும் வலுவாகும். நீங்கள் தொய்வுடன் உணரும் சமயத்தில் உற்சாகம் அளிக்கும் ஒருவரை நீங்கள் இன்று காணலாம். 

கும்பம்:

மன நலனிலும் உடல் நலனிலும் முன்னேற்றம் ஏற்படும் நல்ல நாள். உங்கள் வேலையில் நீங்கள் எடுத்துக்கொண்ட கடின முயற்சிகளுக்கு தகுந்த சன்மானம் கிடைக்கும். கைமீரி போகும் காரியங்களை சாதூர்யமாக கையாள்வீர்கள். உங்களுக்கு பிடித்த விஷயங்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரம் செலவிடலாம். 

மீனம்:

ஆபத்தான முதலீடுகளில் இருந்து தள்ளி இருப்பது நல்லது. புதிதாக சில விஷயங்களை தொடங்குவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு இன்று நல்ல செய்தி வந்து சேரலாம். புதிதான இடங்களுக்கு பயணம் மேற்கொள்வீர்கள். பள்ளி அல்லது கல்லூரி கால நண்பர்களை சந்தித்து மகிழ வாய்ப்புள்ளது. 

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு பண, புகழ், பதவி, பொற்காலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News